சென்னை: ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான அந்த நடிகர் கோலிவுட்டின் அடுத்த பிராமிஸிங் நடிகராக வளர்ந்து வருவார் என்று பார்த்தால் தொடர்ந்து தப்பான ரிலீஸ் தேதி முடிவுகளால் அடி வாங்கி வருகிறாரே என கோலிவுட்டில் உள்ள பிரபலங்களே சிலர் ஃபீல் பண்ணத் தொடங்கி விட்டனர்.
மாஸ் நடிகரின் படத்துடன் எந்தவொரு படமும் வெளியாக அஞ்சி நடுங்கி வரும் சூழலில் அதற்கு முந்தைய வாரம் ரிலீஸ் ஆன படங்களே அல்லு கலங்கி போயுள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு டாப் பீக்கில் இருக்கும் பிரைட் நடிகர் படத்துடன் தேவையில்லாமல் யங் நடிகரின் படத்தை வெளியிட்டு அவருக்கு இந்த முறையும் வின் கிடைக்காமல் போய் விடுமோ என்கிற பஞ்சாயத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்ட காலிலே படும்: ஏற்கனவே வரிசையாக யங் நடிகரின் படங்கள் ஃப்ளாப் ஆகி அந்த நடிகரின் வளர்ச்சியில் எந்தளவுக்கு இடியை இறக்க முடியுமோ அந்த அளவுக்கு அந்த நடிகரை வைத்து படம் பண்ண தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் பக்காவாக வேலை பார்த்து விட்டனர். பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்கிற பழமொழிக்கு அளவு எடுத்து செஞ்ச நபராக நான் தான் மாட்டினேனா? இந்த முறையும் எனக்கு ஆப்படிக்க பார்க்கிறீங்களே என நடிகர் சமீபத்தில் சத்தமே போட்டு விட்டார் என்கின்றனர். வேறு வழி தெரியல ஆத்தா?: ஆனால், படத்தை மீண்டும் ஒத்தி வைக்க எங்களுக்கு வேறு வழி தெரியல ஆத்தா என்பது போல தயாரிப்பாளர்கள் பிரைட் நடிகருடன் யங் நடிகர் படத்தை களமிறக்குவதே அந்த நம்பர் நடிகையை மலை போல நம்பித்தான் என்கின்றனர். இந்த முறை அடி வாங்கினால் அதன் பின்னர் எழுவது ரொம்பவே கஷ்டம் என்பதால் ரிலீஸ் தேதியை எப்படியாவது தள்ளிப் போட்டே ஆக வேண்டும் என நடிகர் அடம் பிடித்து வருகிறார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. நல்லா இருந்தாலும் அடி கன்ஃபார்ம்: பிரைட் நடிகர் பக்கா ஃபார்முக்கு திரும்பியுள்ளதால் ஒட்டுமொத்த தியேட்டர்களும் அவரது படத்துக்கே கிடைக்கும் என்றும் யங் நடிகரின் படத்துக்கு தியேட்டர்கள் குறைவாக கிடைத்தால் அங்கேயே செமத்தியான அடி வசூலில் வந்து விடும் என்றும் படம் நல்லா இருந்தா கூட பெரிய சிக்கல் உள்ளது என்று சினிமா வட்டாரத்தில் சில பிரபலங்களே எச்சரித்து வருகிறார்களாம்.More Articles