சென்னை: பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, 120 ஆண்டுகள் பழமையான வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின் நிர்வாகத்தை முன்னெடுத்து வரும் நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில், குழந்தைகளுக்கான ஆயுர்வேத 'ஸ்வர்ணபிராசன மூளைடானிக்கை' அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாண்புமிகு அமைச்சர் வெங்கட்டரமணன் அவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு, இந்த அரிய மருந்தை மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த அறிமுக விழா, குழந்தைகளின் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, நினைவாற்றல், கவனம் செலுத்தும் திறன் மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றை ஆயுர்வேத கோட்பாடுகளின் அடிப்படையில் மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்வர்ண பிராசன மருந்தை ஒட்டுமொத்த மக்களிடமும் கொண்டு சேர்க்கும் ஒரு மிக முக்கியமான முயற்சியாக இந்த விழா பிரம்மாண்டமாக அமைந்தது.
ஆர்யன் ஷாம் பேச்சு: இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஆர்யன் ஷாம், நான் தமிழ்த் திரைப்படத்துறையில் ஒரு நடிகனாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருந்தாலும், எங்களுடைய வெங்கடரமணா மருந்தகத்தின் உண்மையான, தரமான ஆயுர்வேத மருத்துவ சேவையை இந்த நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் மிக எளிதில் சென்றடையச் செய்ய வேண்டும் என்பதே எங்கள் முதன்மையான நோக்கம் என்றார். பாரம்பரிய வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின் அறிமுக விழாவில் நாட்டின் முன்னணி மருத்துவ நிபுணர்கள், மூத்த ஆயுர்வேத மருத்துவர்கள், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலர் கலந்துக் கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். சுபாஷ் சந்திரபோஸ்: சினிமா மற்றும் மருத்துவத் துறையில் ஒரே நேரத்தில் தடம் பதித்து வரும் நடிகர் ஆர்யன் ஷாம், தற்போது திரையுலகில் ஒரு பிரம்மாண்டமான வரலாற்றுப் படத்தை உருவாக்கி வருகிறார். தற்போது தயாராகி வரும் 'சுபாஷ்' என்ற திரைப்படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தில், சுபாஷ் சந்திரபோஸ் வேடத்திலேயே ஆர்யன் ஷாம் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.More Articles