சென்னை: நடிகை அமலா டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான 'மைதிலி என்னை காதலி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர், மெல்லத் திறந்தது கதவு, பன்னீர் நதிகள், கண்ணே கனியமுதே என அடுத்தடுத்து பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளிலும் டாப் நடிகையாக வலம் வந்தார். சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே, நடிகர் நாகார்ஜுனாவை கடந்த 1992-ஆம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து பிரேக் எடுத்த இவர், கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு 'கணம்' என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

Photo Credit:

நடிகை அமலா: சமீபத்தில் அமலா அளித்த பேட்டி ஒன்றில் தனது கணவர் நாகார்ஜுனாவின் குடும்பம் பற்றி பேசி உள்ளார். அதில், எங்களுடைய குடும்பத்துல மொத்தம் 25 பேர் இருப்போம். அவ்வளவு பெரிய குடும்பம் என்பதால் எங்க வீட்டு டைனிங் டேபிளில் எப்போதுமே ஒரே ஒரு நான்-வெஜ் ஐட்டம் மட்டும் இருக்காது. அந்த 25 பேருக்கு என்னென்ன பிடிக்குமோ, அத்தனை நான்-வெஜ் ஐட்டங்களும் டேபிளில் இருக்கும். சிக்கன், மட்டன், மீன் எனப் பார்த்தாலே கிட்டத்தட்ட எட்டு ஒன்பது ஐட்டங்கள் டைனிங் டேபிளில் அடுக்கி வைத்து இருப்பார்கள். ஆனால், என் மாமனார் நாகேஸ்வர ராவ் சார் அப்படி கிடையாது. அவர் மிகவும் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர் என்பதால், எப்போதுமே ஏதாவது ஒரு சிம்பிளான ஐட்டம் இருந்தாலே போதும் என்று நினைப்பார், அதைத்தான் சாப்பிடுவார். ஆனால் என்னுடைய மாமியார் அப்படி இல்லை, வீட்டில் இருக்கும் எல்லாப் பிள்ளைகளுக்கும் பிடித்தமான அத்தனை உணவுகளையும் சமைத்து அந்த டைனிங் டேபிளில் அடுக்கி வைத்திருப்பார்.

Advertisement

நாகார்ஜுனாவின் அக்கறை: நான் சைவ உணவை சாப்பிட மாட்டேன் என்பதால், குடும்பத்தினர் அனைவரும் சாப்பிடும் அந்த நேரத்தில் என்னுடைய கணவர் நாகார்ஜுனாவுக்கு என் மீதுதான் முழு கவனமும் இருக்கும். அமலாவுக்கு நான்-வெஜ் போடாதீங்க.. அவ இருக்கிற அந்தப் பக்கம் நான்-வெஜ் பாத்திரங்களை வைக்காதீங்க என்று என்னைப்பற்றியே யோசித்துக்கொண்டே இருப்பார். எனக்கு வீட்டில் எந்தவிதமான கஷ்டமோ, சங்கடமோ வந்துவிடக் கூடாது என்பதில் அவர் எப்போதுமே மிகவும் கவனமாக இருப்பார் என்று தனது கணவரின் காதல் குறித்து பெருமையாக பேசியுள்ளார்.