சென்னை: சினிமாவில் ஹீரோயின்கள் காட்டும் கவர்ச்சியை விட, தற்போதைய ட்ரெண்டில் குணச்சித்திர நடிகைகளும், சீரியல் நடிகைகளும் காட்டும் கவர்ச்சிதான் சோசியல் மீடியாவை அடிக்கடி பற்ற வைக்கிறது. அந்த வகையில், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் அம்மா, அண்ணி கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமான நடிகை சுரேகா வாணி, தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஹாட் வீடியோ இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளது

Advertisement

விக்ரம் பட நடிகை: ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கிய சுரேகா வாணி, சக தொகுப்பாளரான சுரேஷ் தேஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சினிமாவில் நுழைந்த அவர், கார்த்தியின் உத்தமபுத்திரன், விக்ரமின் தெய்வத்திருமகன் மற்றும் சித்தார்த்தின் காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் தமிழ்ப் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானார். கடந்த 2019-ஆம் ஆண்டு இவரது கணவர் சுரேஷ் தேஜா உடல்நலக்குறைவால் காலமானதை அடுத்து, சில காலம் சினிமாவிலிருந்து விலகியிருந்த சுரேகா வாணி, தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். இவருக்கு சுப்ரீதா என்ற ஒரு அழகான மகளும் உள்ளார். அவளும் தற்போது சினிமாவில் நடிகையாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Photo Credit:

45 வயசுல இப்படியா?: 45 வயதாகும் சுரேகா வாணி, இன்னும் 20 வயது இளம் பெண் போலத் தனது உடற்கட்டைக் கச்சிதமாகப் பேணிப் பாதுகாத்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் அவர், தற்போது பதிவிட்டுள்ள வீடியோ இணையவாசிகளை வாயடைக்க வைத்துள்ளது. பின்னணியில் விக்ரம் படத்தின் புகழ்பெற்ற 'ஜூன் போனால் ஜூலை காற்றே...' பாடல் ஒலிக்க, காபி பிரவுன் நிற செக்ஸியான லோ-நெக் உடையில், தனது அசாத்திய முன்னழகு மற்றும் கவர்ச்சிப் பொங்கப் பொங்க போஸ்களை அள்ளித் தெளித்துள்ளார். இடையில் குறும்புத்தனமாகத் தனது நாக்கைத் துருத்தி அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள் நெட்டிசன்களை உச்சி கொட்ட வைத்துள்ளது. இந்தக் கிளுகிளுப்பான வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், செம ஹாட்டு மச்சி என்றும் சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு எக்ஸ்பிரஷன் குடுக்குறாங்களே என கமெண்டுகளைப் போட்டு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்

Advertisement