சென்னை: அஜித்குமார் இப்போது கோலிவுட்டின் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். நடிப்பில் மட்டுமின்றி கார் ரேஸிலும் வெற்றிகளை பெற்றுவருகிறார். திரையுலக கரியரை பொறுத்தவரை அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அப்படத்தை அவரே தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவருடைய கனவு படம் குறித்து தெரியவந்திருக்கிறது.
சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் முன்னணிக்கு வந்தவர் அஜித்குமார். கடந்த வருடத்தில் மட்டும் அவர் நடிப்பில் இரண்டு படங்கள் வந்தன. முதலில் வந்த விடாமுயற்சி ஏகேவையும், அவரது ரசிகர்களையும் கைவிட்டது. அடுத்ததாக வந்த குட் பேட் அக்லி; அஜித் ரசிகர்களுக்கு குட்டாகவும், மற்றவர்களுக்கு பேடாகவும், அக்லியாகவும் அமைந்துவிட்டது. இருப்பினும் அந்தப் படம் வசூலில் 100 கோடி ரூபாயை அள்ளியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதெல்லாம் ஏகே ரசிகர்களை முழுவதுமாக திருப்திப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளர் அஜித்?: ஆதிக் ரவிச்சந்திரனின் வேலை செய்யும் ஸ்டைல் பிடித்துவிட்டதால் தன்னுடைய குட் புக்கில் அவரை சேர்த்துவிட்டார் அஜித். அதன் காரணமாக மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். முதலில் இந்தப் படத்தை தயாரிப்பதற்கு ஆட்களே இல்லை என பேசப்பட்டது. தற்போது அப்படத்தை அஜித்தே தயாரிப்பாளர் என்றும்; அவருக்கு துணையாக மனைவி ஷாலினியும் பணியாற்றுவார் என்றும் கூறப்படுகிறது.
கார் ரேஸில் அஜித்: இந்தப் படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கலாம் எனவும் தெரிகிறது. ஏற்கனவே இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய நான்கு படங்களில் மூன்று திரைப்படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. எனவே மீண்டும் இந்தக் கூட்டணி இணையும்பட்சத்தில் பெரிய ஹிட் கிடைக்கும் என்ற சென்ட்டிமென்ட்டையும் ஏகே ரசிகர்கள் நம்பியிருக்கிறார்கள். இந்நிலையில் அஜித்தின் கனவு படம் குறித்து தெரியவந்திருக்கிறது.
வி.கே.சுந்தர் பேட்டி: பத்திரிகையாளரும், அஜித்தின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களில் ஒருவருமான வி.கே.சுந்தர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "ஹாலிவுட் நடிகர் அல் பசினோவின் தீவிரமான ரசிகர்தான் அஜித்குமார். அவருடைய வாழ்நாள் கனவே அல் பசினோ மாதிரி ஒரு படம் செய்ய வேண்டும் என்பதுதான். ஒரு படமாவது அப்படி செய்ய வேண்டும் என நினைக்கிறார். அதிலும் அவர் குறிப்பிட்டு சொல்லும் படம் என்னவென்றால், 'Dog Day Afternoon' என்ற படம்.
வங்கி கொள்ளையை வைத்து எடுக்கப்பட்ட படம். அதை பார்த்துவிட்டு, ஜி இந்த மாதிரி வாழ்க்கையில் ஒரு படம் செய்துவிட வேண்டும் என சொல்லிக்கொண்டே இருப்பார். வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு வந்தால் நிறைய புத்தகங்கள் வாங்கிவருவார். ஒளிப்பதிவு மீது அவருக்கு பெரிய ஆர்வம். துப்பாக்கி சுடுதல், கார் ரேஸ் என அத்தனையிலும் சக்சஸ்ஃபுல்லாக இருக்கும் நடிகர் அஜித் மட்டும்தான். வேறு யாரும் அப்படி இல்லை. சினிமவுக்குள் அவர் வந்ததே ரேஸர் ஆக வேண்டும் என்றுதான். இப்போது ரேஸில் சாதிக்கிறார். அல் பசினோ ஆசைதான் இன்னும் அஜித்துக்கு நிறைவேறாமல் இருக்கிறது" என்றார்.
More Articles
- அஜித் ரசிகர்களை வெறிகொண்டு தேடும் நெட்டிசன்ஸ்.. அஜித் மட்டுமல்ல அஜித் ரசிகர்களும் ...!
- கையில் சிகரெட்டுடன் அஜித் பேட்டி.. அந்த தைரியத்தை யார் கொடுத்தது?.. நேர்காணல் எடுத்தவரே ஓபன் டாக்
- எலேய் சன் டிவி நீ ஆர்ட்டிஸ்ட் னு நிரூபிச்சட்டலேனு கலாய்க்கும் நெட்டிசன்ஸ்.. அப்படி என்ன ஆச்சு?
- ஒரே முத்தமழையாக இருக்கேப்பா.. அம்மா மறைவுல இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் அஜித்
- அஜித் மவுசு குறைந்துவிட்டதா?.. கேட்கும் எதுவும் கிடைக்கலையாம்.. 100 கோடி ரூபாயும் இல்லையாம்
- Ajith Kumar Salary: அடேங்கப்பா அஜித் சம்பளம் 187 கோடியா?.. அதுவும் இப்படித்தான் வாங்கப் போறாரா?