சென்னை: பாணா காத்தாடி திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான அதர்வா; இப்போது இதயம் முரளி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் ஓரளவுக்கு நல்ல ரெஸ்பான்ஸையே பெற்றிருக்கிறது. படமும் ஹிட் கணக்கில் சேர்ந்துவிட்டது. இந்நிலையில் இன்று படக்குழு தரப்பில் நன்றி சொல்லும் நிகழ்வு நடைபெற்றது. அதில் அதர்வாவின் பேச்சு கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Advertisement

மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா. அவர் பாணா காத்தாடி திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதற்கு பிறகு அவர் நடித்த முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி உள்ளிட்ட படங்கள் எல்லாம் தோல்வியைத்தான் சந்தித்தன. இருப்பினும், அதர்வா சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றார். அவருக்கு இருக்கும் திறமைக்கு அவர் இன்னும் சரியான உயரத்துக்கு செல்லவில்லை என்ற கருத்து அத்தனை பேரிடமும் இருக்கிறது. கடைசியாக அவர் பராசக்தி படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

Photo Credit:

இதயம் முரளி: இப்போது அவர் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் இதயம் முரளி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன், சின்னி ஜெயந்த், பரிதாபங்கள் டிராவிட், சுதாகர் என பலர் நடித்திருக்கிறார்கள். தமன் இசையமைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு பெரிய எதிர்பார்ப்புடன் படம் ரிலீஸானது. மேலும் ஆகாஷ் இயக்கிய முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்படி இருக்கு படம்?: படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது டீசன்ட்டான விமர்சனத்தையே கொடுத்தார்கள். 90ஸ் கிட்ஸ்களுக்கு இந்தப் படம் ரொம்பவே பிடிக்கும் என்பதும்; பல நாஸ்டாலஜியா நினைவுகளை அந்தப் படம் மீண்டும் கிளறிவிட்டது; சூப்பரான ஃபீல்குட் திரைப்படம் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார்கள். இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு படம் மெகா ஹிட்டாகவில்லை என்பது கொஞ்சம் கெட்ட செய்திதான். இந்நிலையில் இன்று படக்குழு தரப்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

Advertisement

அதர்வா பேச்சு: அதில் பேசிய அதர்வா, "இதயம் முரளி என ஆகாஷ் இந்த டைட்டிலை சொல்லியபோது நான் ரொம்பவே யோசித்தேன். உண்மையில் என் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டன. அதுவும், 'பொட்டு வைத்த வட்ட நிலா' பாடல் போட்டபோதெல்லாம் என் குடும்பமே கண்கள் கலங்கிவிட்டது.தமிழ் சினிமாவில் இப்படி ஒரு லைட் ஹார்ட்டட் லவ் ஸ்டோரி கொடுத்த ஆகாஷுக்கு ரொம்ப நன்றி. இந்தப் படத்தில் நடித்ததற்காக சந்தோஷப்படுகிறேன். இதுமாதிரியான படங்களுக்கு ஒளிப்பதிவு முக்கியம். மனோஜ் பரமஹம்சா அனைவரையும் லட்டு மாதிரி காண்பித்துவிட்டார்.

Advertisement

அனைவருக்கும் நன்றி: மொத்தம் நான்கு மணி நேர ஃபுட்டேஜுக்கு நான் டப் செய்தேன். எல்லோரும் தோன்றியதை செய்தோம். அதையெல்லாம் எடிட் செய்து சூப்பராக கொடுத்த எடிட்டர் பிரதீப்புக்கு நன்றி. வசனங்களும் சூப்பராக அமைந்திருந்தன. என் அப்பாவுடைய நீண்ட கால நண்பர் சின்னி ஜெயந்த். அவரும் இந்தப் படத்தில் நடித்தது எனக்கு சந்தோஷம். அவருக்கும் நன்றி. ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவருமே ஒன்றாக இருந்தோம். ஷூட்டிங் முடிவில் நாங்கள் எல்லோரும் ஒரே குடும்பமாகிவிட்டோம். இதயம் முரளி டைட்டில் செட் ஆகுமா என கேட்டுக்கொண்டே இருந்தேன். ஆகாஷ்தான், சரியாக வரும் என நம்பிக்கை கொடுத்தார்" என்றார்.