சென்னை: சமீபத்தில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியாகி 70 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபீஸையே பிளாஸ்ட் பண்ண பிளாஸ்ட் படத்தில் வில்லனாக நடித்து அசத்திய அர்ஜுன் சிதம்பரம் தனது திருமண புகைப்படங்களையும் வீடியோக்களையும் சற்றுமுன் வெளியிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
2015ல் வெளியான மூன்றே மூன்று வார்த்தை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் அர்ஜுன் சிதம்பரம். ரம், நேர்கொண்ட பார்வை, எனை நோக்கி பாயும் தோட்டா, பொன்னியின் செல்வன், அநீதி, கொலை, ரத்தம், தக் லைஃப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், இந்த ஆண்டு அர்ஜுன் உடன் நடித்த பிளாஸ்ட் படம் தான் அர்ஜுன் சிதம்பரத்துக்கு நல்ல அங்கீகாரத்தையும் மிகப்பெரிய வெற்றியையும் கொடுத்துள்ளது. திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியீடு: கடந்த ஆண்டு ஜூலை 13ம் தேதி அர்ஜுன் சிதம்பரம் தனது நெருங்கிய தோழியான ஜெயஸ்ரீ என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணமாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், முதலாம் ஆண்டு திருமணத்தை முன்னிட்டு திருமணத்தன்று எடுத்த போட்டோக்களையும், வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு "My Plot" இது என்னோட கதை என பதிவிட்டுள்ளார். தாலி கட்டும் வீடியோ: நெருங்கிய தோழியே மனைவியாக கிடைக்கும் வரமெல்லாம் ஒரு சிலருக்குத்தான் அமையும் என்று சொல்வார்கள். அந்த வகையில் அர்ஜுன் சிதம்பரம் அதிர்ஷ்டசாலி தான். 42 வயதாகும் அர்ஜுன் சிதம்பரம் கடந்த ஆண்டு 41 வயதில் தனது தோழியை திருமணம் செய்துக் கொண்டார். பிளாஸ்ட் படத்தின் வெற்றிக்குப் பிறகு அவருக்கு தொடர்ந்து பெரிய கதாபாத்திரங்கள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் பயங்கரமான வில்லனாக இவர் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது மனைவிக்கு தாலி கட்டும் காட்சிகளையும் இன்ஸ்டா போஸ்ட்டில் ஷேர் செய்துள்ளார். விட்டா கடிச்சிடுவாரு போல: மேலும், மனைவியை கடிப்பது போன்று திருமணத்தன்று போஸ் கொடுத்து எடுத்த க்யூட்டான குறும்புத்தனமான போட்டோக்களையும் இன்ஸ்டாவில் அர்ஜுன் சிதம்பரம் ஷேர் செய்துள்ளார். அவருக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முதலாம் ஆண்டு திருமண நாள் போல எல்லா நாளும் மகிழ்ச்சியாக ஒன்றாக வாழுங்கள் என வாழ்த்தி வருகின்றனர்.More Articles