சென்னை: ஜன நாயகன் திரைப்படம் வரும் ஜூலை 23ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், புதிய டிரைலரை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், புதிய ப்ரோமோ வீடியோவை தளபதி விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

Advertisement

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் செய்த அந்த ஃபினிஷ் செய்கை ஜன நாயகன் படத்திலேயே இருப்பதை பார்த்த ரசிகர்கள் கூஸ்பம்ப்ஸ் ஆகியுள்ளனர்.

Advertisement

மேலும், ஜன நாயகன் படத்தின் புதிய ப்ரோமோவில் 2 இடங்களில் ஜன நாயகன் விஜய் முதலமைச்சர் விஜய் ஆக மாறும் டிரான்சிஷன் எஃபெக்ட்ஸ் ரசிகர்களை தியேட்டர்களை நோக்கி அழைத்து வந்து விடும் என்றே தெரிகிறது.

கொண்டாட்டத்துக்கு ரெடியான அமைச்சர்கள்: ஜன நாயகன் படத்தை அனைத்து தொகுதிகளிலும் திருவிழா போல கொண்டாட வேண்டும் என அமைச்சர்கள் முதல் கட்சி நிர்வாகிகள், தவெக தொண்டர்கள் என வெறித்தனமாக ஒரு பக்கம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சில அமைச்சர்கள் பகிரங்கமாகவே ஜூலை 23ம் தேதி லீவு கொடுத்துடுங்க சிஎம் ஐயா கடைசியா ஒருமுறை தளபதி வெறியர்களாக படத்தை கொண்டாடி விடுகிறோம் எனக் கேட்டுள்ளனர்.

Advertisement

ஜன நாயகன் புதிய ப்ரோமோ: முதலமைச்சராக மாறிய தளபதி விஜய் தனது Actor VIjay எக்ஸ் தளத்தில் இந்த புதிய ஜன நாயகன் ப்ரோமோ வீடியோவை தற்போது வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். இதற்கு பிறகு இந்த ஐடியில் இருந்து பட அப்டேட்கள் வராதே என்றும் ரசிகர்கள் ஃபீல் பண்ண ஆரம்பித்துள்ளனர். ஒன் லாஸ்ட் டைம் தளபதி விஜய்யை தியேட்டர்களில் கொண்டாட ஏகப்பட்ட ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். சுமார் 25 கோடிக்கு இப்பவே டிக்கெட் முன் பதிவுகள் நடைபெற்றுள்ள நிலையில், விஜய்யின் இந்த ட்வீட்டுக்குப் பிறகு டிக்கெட் புக்கிங் மேலும், அதிகரிக்குமா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

Advertisement

தரமான செய்கை - சிஎம் டிரான்சிஷன்: ஜன நாயகன் படத்திலேயே இயக்குநர் வினோத் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கையை அசைத்து முடித்து விட்டேன் என செய்கை செய்ததை போல காவல் அதிகாரி கெட்டப்பில் இருக்கும் தளபதி வெற்றிக் கொண்டானும் அதே செய்கையை செய்துள்ள காட்சி தற்போது ப்ரோமோவில் அமைந்துள்ளது. மேலும், சிஎம் விஜய்யாக மாறிய டிரான்சிஷன் காட்சிகளையும் எடிட் செய்து வெளியிட்டு சம்பவம் செய்துள்ளனர். கண்டிப்பாக தியேட்டருக்குச் செல்லும் விஜய் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.