சென்னை: நேற்று பொம்மை கார் வைத்து விளையாடிய முதலமைச்சர் விஜய்யின் வீடியோக்கள் வைரலான நிலையில், இன்று சென்னை மாநில கல்லூரியில் மருத்துவத் துறையில் நடைபெற்ற விழாவில் கலந்துக் கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், நலம் டிஎன் என்கிற புதிய இணையதள சேவையையும் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

Advertisement

மருத்துவர்களுடன் முதலமைச்சர் விஜய் அமர்ந்துக் கொண்டு போட்டோக்களையும் வீடியோக்களையும் எடுத்துக் கொண்டார். அவர்களுடன் அவர் பழகிய விதம் மற்றும் அவர் கலந்துரையாடியதை பார்த்த தளபதி ரசிகர்கள் அப்படியே எங்களை நண்பன் காலத்துக்கு கூட்டிட்டுப் போயிட்டியே தலைவா என ஏகப்பட்ட எடிட்களை போட்டு ஜன நாயகனை கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் ஜன நாயகன் படத்தின் புதிய டிரைலருடன் ரிலீஸ் தேதியை எப்போது அறிவிக்கும் என்றும் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

அன்பு ராஜ்ஜியம்: தமிழ் சினிமாவில் தனது அன்பு ராஜ்ஜியத்தால் அனைவரது மனங்களையும் வென்ற தளபதி விஜய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்த நிலையில், கண்டிப்பாக திமுகவுக்கு எதிராக ஒரு நல்லாட்சியை கொடுப்பார் என நம்பி ஏகப்பட்ட மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளனர். பெரும்பான்மை எட்டாத நிலையிலும், விஜய் ஆட்சி அமைக்க திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தந்த நிலையில், அவர்களுக்கு அதிகாரத்தில் பங்கு கொடுத்து அன்பு ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார் விஜய் என்கின்றனர்.

Advertisement

செமையா வைப் பண்றாரு சிஎம்: ஹீரோவாக படப்பிடிப்பு தளங்களில் தனது ரசிகர்களுக்காக நடித்துக் கொண்டிருந்த விஜய் ஆடியோ லான்ச் நிகழ்வுகளில் ரசிகர்களை சந்தித்துப் பேசும் போதே செம ஹேப்பியாகி விடுவார். ஆனால், இப்போ முதலமைச்சராக மாறியுள்ள அவர் தொடர்ந்து மக்களை சந்தித்து செம ஜாலியாகவும் சகஜமாகவும் பேசி வருவதையும் அவர்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியும் செம வைப் செய்து வருகிறார் என்கின்றனர்.

நண்பன் விஜய்: ஊழல் இல்லாத ஆட்சியாக மட்டுமின்றி மக்களுக்குத் தேவையான ஆட்சியை விஜய் தருவார் என அனைவரும் நினைக்கும் வண்ணம் தொடர்ந்து அதற்காக உழைத்து வரும் நிலையில், மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான பணி ஆணைகளை வழங்கிய விஜய் அவர்களில் ஒருவராகவே கலந்து விட்டதை பார்த்த ரசிகர்கள் நண்பன் விஜய்யை மீண்டும் பார்த்தது போல இருக்கு அண்ணா என கொண்டாடி வருகின்றனர்.