தனுஷின் ஹாலிவுட் படத்திற்கு நார்வே திரைப்பட விழாவில் விருது


சென்னை: தனுஷின் ஹாலிவுட் படத்திற்கு நார்வே திரைப்பட விழாவில் விருது கிடைத்துள்ளது.

தனுஷ் ஹாலிவுட்டில் நடித்துள்ள படம் " த எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் த ஃபகிர்". தனுஷின் முதல் ஹாலிவுட் படமான இது இந்தியா, இத்தாலி, லிபியா, பிரான்ஸ் என நான்கு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு வரும் இப்படம், சமீபத்தில் நடைபெற்ற நார்வே திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வண்ணம் இருப்பதாக தேர்வுக் குழுவினர் பாராட்டினர். அதோடு இப்படத்திற்கு " த ரே ஆப் சன் ஷைன்" என்ற விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த தகவலை படத்தின் இயக்குனர் கென் ஸ்காட் மகிழ்ச்சியோடு ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

கடந்த மே மாதம் ரிவியேராவில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டு பாராட்டுகளை குவித்தது. அந்த நிகழ்வில் தனுஷ் படக்குழுவினருடன் கலந்துகொண்டார்.

கென் ஸ்காட் இயக்கியுள்ள இப்படத்தில் பெரனிஸ் பிஜோ, எரின் மொரைர்ட்டி, பென் மில்லர், தனுஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த மே மாதம் இப்படம் ஃப்ரெஞ்ச் மற்றும் ஆங்கில மொழியில் ஐரோப்பிய நாடுகளில் ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தியா உள்பட மற்ற நாடுகளில் விரைவில் வெளியிடப்பட உள்ளது. தமிழில் "என் வாழ்க்கையைத் தேடி நானும் போறேன்" என பெயரிடப்பட்டுள்ளது. வேலையில்லா பட்டதாரி படத்தில் ஊதுங்கடா சங்கு பாடலில் வரும் வரியை இப்படத்திற்கு தமிழ்த் தலைப்பாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

Actor Dhanush Hollywood debut “ The extraordinary Journey of the Fakir” movie got “The Ray of Sun Shine” award in Norway film festival.