சென்னை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்தில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது நாடு முழுவதும் கவனம் பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட இன்னொரு பதிவு சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை கிளப்பியது. இதையடுத்து, தன்னை விமர்சித்தவர்களுக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ள சல்மான் கானின் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் பேசுபொருளான நிலையில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்தும் சல்மான் கான் கருத்து தெரிவித்திருந்தார். மாணவர்களின் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும் என்றும், சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.

Advertisement

அந்த பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா மருத்துவமனைக்கு சென்று சோனம் வாங்சுக்கை சந்தித்து, அவரது உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாக தகவல்கள் வெளியாகின. இதுவே சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியது.

மாணவர்களின் பாதுகாப்பு: அதன்பிறகு சல்மான் கான் வெளியிட்ட மற்றொரு பதிவில், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்விதான் முதன்மை என்றும், பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், மாணவர்கள் வீடு திரும்ப வேண்டும் என்றும், சோனம் வாங்சுக்கும் உண்ணாவிரதத்தை முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த பதிவு வெளியான உடனே, "அரசுக்கு பயந்து தான் இப்படி பேசுகிறார்" என்று சில நெட்டிசன்கள் விமர்சிக்கத் தொடங்கினர்.

Advertisement

தரமான கேப்ஷன்: இந்த விமர்சனங்கள் தீவிரமடைந்த நிலையில், நள்ளிரவு சுமார் 3 மணி அளவில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை சல்மான் கான் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். சட்டையில்லாமல் தனது கட்டுக்கோப்பான உடலமைப்பை காட்டிய அந்த புகைப்படத்திற்கு, "சல்மான் கான் பயந்துவிட்டார்... ஹ்ம்ம்... பயந்தவன் செத்தான்" என்று கேப்ஷன் கொடுத்து, விமர்சகர்களுக்கு நேரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். சல்மான் கான் தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார் என்று அவரது ரசிகர்கள் பாராட்டி வரும் நிலையில், இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.