சென்னை: நடிகர் தனுஷ் தனது 43வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். திருவள்ளூரில் நேற்று நடந்த தனுஷ் ரசிகர் மன்ற நற்பணி இயக்கத்தினர் நடத்திய விழாவில் பங்கேற்ற அவர் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து பேசியது சினிமா வட்டாரத்தை தாண்டி அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நடிகர் விஜய் கட்சியைத் தொடங்கி 2 ஆண்டுகளில் முதலமைச்சர் ஆன நிலையில், அடுத்து நடிகர் தனுஷும் கட்சியை ஆரம்பித்து அரசியலுக்கு வரப்போகிறாரா? என ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பி உள்ளன.

Advertisement

மேலும், தனுஷின் பேச்சை வைத்து ஏகப்பட்ட ட்ரோல் மீம்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. அதில், குறிப்பாக இந்த ஒரு மீம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்?: சமீபத்தில் தனுஷின் ரசிகர் மன்ற கொடி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அது பல ஆண்டுகளாக உள்ளது.புதிதாக கார்களில் மாட்டி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என சுப்ரமணியம் சிவா தனுஷின் கொடி சர்ச்சைக்கு முட்டுக் கொடுத்திருந்தார். பிரபல ஜோதிடர்களும் சமீபத்திய நிகழ்ச்சியில் விஜய்க்கு அடுத்து எந்த நடிகர் அரசியலுக்கு வருவார் என்கிற கேள்வியை எழுப்பப்பட்ட நிலையில், தனுஷ் நிச்சயம் வருவார் என்றே கூறியுள்ளனர். நடிகர் தனுஷும் தமிழ் முருகன் படத்தை அறிவித்த நிலையில், அரசியலுக்கு வர பக்காவாக ரெடியாகி வருகிறார் என்கின்றனர்.

Advertisement

சட்டசபை சைகை: ஜன நாயகன் படத்தில் விஜய் செய்த ஃபினிஷ் சைகையை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்ததும் மு.க. ஸ்டாலின் செய்தார் என்கின்றனர். கொளத்தூரில் மு.க. ஸ்டாலினை தோற்கடித்த வி.எஸ். பாபு 2 கைகளிலும் ஃபினிஷ் சைகையை செய்தார். முதலமைச்சராக விஜய் பதவியேற்று சட்டசபை சென்ற நிலையில், அங்கேயும் அதே சைகை செய்தார். இந்நிலையில், தனுஷ் 2031ல் சட்டமன்றத்தில் ஒரு சைகை செய்யப் போகிறார் என மீம்கள் குவிந்து வருகின்றன.

2031ல் தனுஷ்: நடிகர் தனுஷ் சீக்கிரமே கட்சியை தொடங்கி ரஜினிகாந்த் ரசிகர்களையும், அஜித் ரசிகர்களையும் தனது கட்சியில் சேர்த்துக் கொண்டு விஜய்க்கு எதிராக பிரச்சாரம் செய்து தேர்தலில் களமிறங்கி போட்டியிட்டு வெற்றிப்பெற்றால், அவர் 2031ல் சட்டமன்றத்தில் மாரி படத்தில் வருவது போல "யார் இடத்துல வந்து யாரு சீன் போடுறது" என்கிற சைகையை செய்வார் என மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர். அரசியலில் இதெல்லாம் நடக்காது என்று சொல்லவே முடியாது. இந்த காலத்தில் மக்கள் மனங்களை வென்றால் அனைத்தும் சாத்தியமே.