சென்னை: அஜித்குமார் கடந்த வருடத்தில் இரண்டு படங்களில் நடித்தாலும்; அவரது மார்க்கெட் வேல்யூவுக்கு தகுந்த வெற்றியை பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதன் காரணமாக அடுத்த படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்றும்; அவரும் ஷாலினியும் தயாரிப்பு பணிகளில் இறங்கப்போவதாகவும் கூறப்படுகிறது. அந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

அஜித்துக்கு அறிமுகமே தேவையில்லை. ஏகப்பட்ட தோல்விகளை அவர் தன்னுடைய பாதையில் சந்தித்தாலும்; ஒவ்வொரு முறையும் அதிலிருந்து மீண்டும் எழுந்து வந்திருகிறார். தொடர்ச்சியாக தோல்விகளை கொடுத்த நிலையில்தான் பில்லா, மங்காத்தா வந்து பட்டையை கிளப்பின. அதற்கு அடுத்ததாக ஆரம்பம், வீரம், விஸ்வாசம் என வெற்றி படங்களில் நடித்தார். போட்டிக்கு வந்த ஜில்லா, பேட்ட படங்களை எல்லாம் அஜித்தின் படங்கள் தூக்கி சாப்பிட்டுவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.

Advertisement

Photo Credit:

கடந்த வருடத்தில் இரண்டு படங்கள்: வருடத்துக்கு அவர் ஒரு படம் நடிப்பதே பெரிதுதான். ஆனால் கடந்த வருடத்தில் மட்டும் இரண்டு படங்களில் நடித்தார். அவற்றில் விடாமுயற்சி படுதோல்வியையும், குட் பேட் அக்லி விமர்சனத்துடன் கூடிய வெற்றியையும் பெற்றது. இருப்பினும் ஏகேவுக்கு இருக்கும் மவுசுக்கும், மார்க்கெட் வேல்யூக்கும் குட் பேட் அக்லி படத்தின் வெற்றி பொருந்தவில்லை என்பது பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரத்தின் கருத்தாக இருப்பதையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும்.

Advertisement

தயாரிப்பாளர் அஜித்?: அதன் காரணமாக அவரது அடுத்த படத்தை தயாரிக்க சிலர் முன்வந்தாலும்; அவர் கேட்கும் சம்பளத்தை தர யாரும் தயாராக இல்லை. இதன் காரணமாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்து தான் நடிக்கப்போகும் படத்தை தானே தயாரிக்க திட்டமிட்டிருக்கிறாராம். தயாரிப்பு பணிகளை கவனிக்க மனைவி ஷாலினியும் திரைத்துறையில் ரீ என்ட்ரி கொடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என்று தெரிகிறது.

நோ பேட்டி: அஜித்தின் பாலிசியை பொறுத்தவரை பேட்டி கொடுப்பதை பெரும்பாலும் விரும்பாதவர். கடைசியாக அவர் அசல் படத்தின் போது பேட்டி கொடுத்ததாக நியாபகம். அதற்கு பிறகு அதை தவிர்த்துவந்த அவர்; கார் ரேஸில் சென்ற பிறகு அந்த பாலிசியை கொஞ்சம் தளர்த்தியிருக்கிறார். இருப்பினும் ஆங்கில ஊடகங்களுக்குத்தான் பேட்டியை கொடுக்கிறார். இப்போதுதான் அவர் இப்படி; ஆனல 90களிலும் 2010க்கு முன்னர்வரை எக்கச்சக்க பேட்டிகளை கேஷுவலாக கொடுத்திருக்கிறார்.

Advertisement

கையில் சிகரெட்டுடன்: முக்கியமாக ஒரு பேட்டியில் கையில் சிகரெட்டுடன் அவர் பேசியது இன்னமும் பலரால் ரசிக்கப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பேட்டியை எடுத்த பத்திரிகையாளர் சாகுல் இப்போது தனியார் யூடியூப் சேனலிடம் பேசியிருக்கிறார். அவர் ஏகே குறித்து கூறுகையில், "அஜித்குமர் நல்ல நடிகர் என்பதை தாண்டி முதலில் நல்ல மனிதர். விளம்பர படங்களில் அவர் எப்படி ஒரு மாடலாக இருந்தாரோ அதேபோல் நானும் ஒரு மாடல். அவர் என்னை பெயர் சொல்லித்தான் அழைப்பார். நானும் அவரை பெயரை சொல்லித்தான் அழைப்பேன்.

அந்த தைரியம்: அதற்கு பிறகு அவர் பிஸியாகிவிட்டார். 2019ஆம் ஆண்டு வால்ட்டர் என்ற படத்தின் விழாவுக்கு சென்றபோது சுரேஷ் சந்திராவை சந்தித்தேன். அப்போது அஜித் எப்படி இருக்கிறார் என்று கேட்டேன். அவரை சந்திக்கும்போது, அவர் நம்முடன் நெருக்கமாகிவிட்டார் என்று தோன்றும். அந்த அளவுக்கு பழகுவார்.

Advertisement

அன்று அவர் சிகரெட்டுடன் பேட்டி கொடுத்தபோது என்ன இவர் திமிராக இருக்கிறார் என தோன்றும். இப்போது போட்டு பார்த்தால் ரொம்பவே ப்ராக்டிக்கலாக இருக்கும். இப்போது ரேஸிங்கிற்காக உலகம் முழுவதும் செல்கிறார். இந்த தைரியத்தை அவருக்கு யார் கொடுத்தது. ஒரு படி மேலே செல்ல வேண்டும் என அவர் நினைக்கலாம். ஆனால் அவருக்கு அந்த மனோபாவமே இல்லை. எனக்கு ரேஸிங் பிடித்திருக்கிறது செல்கிறேன் என போகிறார்" என்றார்.