என்னத்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: ஷங்கர் மீது செம கடுப்பில் ரஜினி ரசிகாஸ்


சென்னை: என்னத்த பெரிய விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் என்று ரஜினி ரசிகர்கள் இயக்குனர் ஷங்கர் மீது கடுப்பில் இருக்கிறார்கள்.

கிராபிக்ஸ் பணிகளால் பல காலம் இழுத்தடிக்கப்பட்ட 2.0 படம் ஒரு வழியாக நவம்பர் மாதம் 29ம் தேதி ரிலீஸாகிறது. ரீலீஸ் தேதியை சொன்னீங்க அப்படியே டீஸர் அப்டேட்டையும் சொல்லிவிட்டால் நன்றாக இருக்கும் என்று ரஜினி ரசிகர்கள் ஷங்கரிடம் கெஞ்சிக் கூத்தாடினார்கள்.

அதன் பிறகே டீஸர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி

டீஸர்

2.0 டீஸரை விநாயகர் சதுர்த்தி அன்று 3டியில் தியேட்டர்களில் வெளியிடுகிறோம் என்று படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் தெரிவித்தது. ஷங்கரும் இது குறித்து ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டார். டீஸர் வெளியீட்டு அறிவிப்பை பார்த்த ரஜினி ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் தற்போது அவர்களிடம் அதே அளவு மகிழ்ச்சி இல்லை.

ரஜினி

ஷங்கர்

2.0 டீஸர் வெளியீடு குறித்து ஷங்கர் தினமும் ஒரு போஸ்டருடன் ட்வீட்டி வருகிறார். பிரச்சனையே அந்த போஸ்டர்கள் தான். காரணம் சில போஸ்டர்களில் படத்தின் ஹீரோவான ரஜினியின் பெயரையை காணவில்லை. அனைத்து போஸ்டர்களிலும் இயக்குனர் ஷங்கரின் பெயர் மட்டும் தவறாமல் இருக்கிறது. மேலும் அக்ஷய் குமாருக்காக தனியாக போஸ்டர் வெளியிட்டதும் ரஜினி ரசிகர்களுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.

பறவை

கோபம்

பறவை முகத்தை, காலை வைத்து எல்லாம் போஸ்டர் தேவையா? எங்கள் தலைவர் ரஜினியின் வகை, வகையான புகைப்படங்களை வைத்து போஸ்டர் போட்டிருக்கலாமே. புகைப்படத்தை விடுங்க சில போஸ்டர்களில் தலைவரின் பெயரையை காணோம். இது ரஜினி படம். என்ன தான் பெரிய கிராபிக்ஸ் எல்லாம் இருந்தாலும் ரஜினிக்காக தான் படம் ஓடப் போகிறது என்று குமுறுகிறார்கள் ரசிகர்கள்.

தியேட்டர்

டிக்கெட்

உங்களுக்கு அருகில் உள்ள பி.வி.ஆர். மற்றும் சத்யம் சினிமாஸில் 2.0 டீஸரை 3டியில் பார்க்கலாம். +91 9099949466 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து இலவச டிக்கெட்டை பெறலாம் என்று ஷங்கர் நேற்று ட்வீட்டியிருந்தார். ரஜினி படம் என்பது போன்று இது ஷங்கர் படமும் கூட. இயக்குனர் ஆனதில் இருந்தே வெற்றி இயக்குனர் என்ற பெயரை தக்க வைத்துள்ளார் ஷங்கர் என்றால் அது சாதாரண காரியம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

Rajini fans are unhappy with director Shankar in connection with 2.0 teaser promotional posters. Rajini's name is missing in some of the posters.