சென்னை: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கியிருக்கும் திரைப்படம் கட்டா குஸ்தி 2. சில வாரங்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இந்தப் படம் பிடித்திருந்தது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்ற சூழலில்; ரஜினிகாந்த் பாராட்டியிருக்கிறார்.
செல்லா அய்யாவு - விஷ்ணு விஷால் கூட்டணியில் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி. ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ஒரு கமர்ஷியல் படத்தை ஹீரோயின் ஓரியன்ட்டட் படமாக கொடுக்க முடியும் எனவும் செல்லா நிரூபித்தார். வசூலிலும், விமர்சனத்திலும் படத்துக்கு கிடைத்த ஏகோபித்த ஆதரவை அடுத்து; அதன் இரண்டாவது பாகத்தை எடுத்தார்கள்.
கட்டா குஸ்தி 2: அதன்படி கட்டா குஸ்தி 2வில் விஷ்ணு விஷால்,ஐஸ்வர்யா லட்சுமி, முனீஸ்காந்த், கருணாஸ், ரம்யா கிருஷ்ணன், குழந்தை நட்சத்திரம் சாரா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். சில வாரங்களுக்கு முன்பு வெளியான படம் முதல் நாள் முதல் காட்சியிலிருந்தே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற தொடங்கியது. இதன் காரணமாக அடுத்தடுத்த காட்சிகளுக்கு தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது.
சூப்பர் ஹிட் படம்: முக்கியமாக குடும்ப ரசிகர்களிடம் படம் ரொம்பவே கனெக்ட் ஆகிவிட்டதன் காரணமாக; முதல் சில நாட்கள் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல்லாக போனது. வசூலும் சக்கைப்போடு போட்டது. இதன் காரணமாக இயக்குநருக்கு பத்து சவரனில் நகையும், ஹீரோ விஷ்ணு விஷாலுக்கு ஒரு பிஎம்டபிள்யூ காரும் தயாரிப்பாளர் கிஃப்ட் செய்தார். செல்லா அய்யாவுக்கும் விஷ்ணு ஒரு காரை ரிலீஸுக்கு முன்னதாகவே பரிசாக கொடுத்துவிட்டார்.
பாராட்டிய ரஜினி: இந்நிலையில் ரஜினிகாந்த் இந்தப் படத்தை பாராட்டியிருக்கிறார். அவர் படம் குறித்து விஷ்ணு விஷாலிடம் கூறுகையில், "செம்ம படம். ரொம்ப ஜாலியான எண்ட்டெர்டெயினர். இந்த மாதிரி படங்கள் இப்போது எல்லாம் வருவதே இல்லை. ரொம்ப நல்லா நடித்திருக்கிறீர்கள். ஐஸ்வர்யா லட்சுமியும் சூப்பர் நடிப்பு. குட்டி சாரா பாப்பாவை எப்படி கண்டுபிடித்தீர்கள். அவர் அசத்திவிட்டார். விஷ்ணு, உங்களுக்கு நல்ல கதை அறிவு இருக்கிறது. இன்னும் நிறைய நல்ல படங்களை கொடுங்கள்" என குறிப்பிட்டிருக்கிறார்.
விஷ்ணு விஷால் பெருமிதம்: இதுகுறித்து விஷ்ணு விஷால் வெளியிட்டிருக்கும் பதிவில், "கட்டா குஸ்தி 2 படத்தை பார்த்த பிறகு ஒரே ஒரு சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் என்னை நேரில் அழைத்து பாராட்டினார். அது அளவிட முடியாத உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது. இந்தப் பயணத்தின் மிகச்சிறந்த தருணம் அவரிடமிருந்து வந்த அந்த தொலைபேசி அழைப்புதான். அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும், என் அடுத்த பயணத்துக்கு ஊக்கமாக அமைந்திருக்கிறது" என்றார்.
More Articles
- ஜனநாயகன் மாதிரியே ஜெயிலர் 2?.. ரஜினி எடுத்த அதிரடி முடிவு?.. என்ன விவரம் தெரியுமா?
- ரஜினிகாந்த்தின் தர்மன்.. தெளிவான பிளானை போட்டிருக்கும் அஷ்வத் மாரிமுத்து.. ஒரு சிக்கலும் இல்லை
- அனிருத் - காவ்யா மாறன் திருமண தேதி இதுதான்.. விஷயத்தை சொன்ன பிரபலம்.. அது நடந்த பிறகுதான் எல்லாம்
- பாபா படம் ஓடும்போதே ரன் படத்துக்கு வந்தாங்க.. அப்படி சம்பவம் செய்ததா?.. பழைய நினைவில் லிங்குசாமி
- தர்மன் படத்தில் ரஜினிக்கு வைத்த முதல் ஷாட்.. ஸ்பாட்டிலேயே விசில் அடித்த இயக்குநர்.. சம்பவம் தரம்
- பாவா லட்சுமணனுக்கு மாதா மாதம் ரஜினி கொடுக்கும் தொகை.. சூப்பர் ஸ்டார் மனசே மனசுதான்