சென்னை: சமந்தாவும் அதர்வாவும் 2010ம் ஆண்டு பானா காத்தாடி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் ஹீரோயினாகவும் தங்களது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தனர். நடிகர் முரளியின் வாரிசான அதர்வா முரளிக்கு ஆரம்பத்திலேயே சமந்தா ஹீரோயினாக கிடைத்தார்.
சமந்தாவை தொடர்ந்து அமலா பால், ராஷி கன்னா, நயன்தாரா, ஹன்சிகா தொடங்கி தற்போது ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் என ஏகப்பட்ட டாப் நடிகைகளுடன் இணைந்து நடித்து விட்டார் அதர்வா.
2010ல் ஹீரோவாக பானா காத்தாடி படத்தில் அதர்வா நடித்த நிலையில், சுமார் 16 ஆண்டுகளாக இதயம் முரளி படம் வரை நடித்த நிலையில், இன்னமும் அவரது பாக்ஸ் ஆபீஸ் கிராஃப் பெரிதாக உயரவே இல்லை என்பது தான் சோகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. டிஎன்ஏ வசூல்: கடந்த ஆண்டு அதர்வா நடித்து வெளியான டிஎன்ஏ திரைப்படம் அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. அதற்கு முன்னதாக நயன்தாரா, விஜய் சேதுபதியுடன் இணைந்து அவர் நடித்த இமைக்கா நொடிகள் படம் அதிகபட்சமாக 50 கோடி வரை வசூல் ஈட்டி வெற்றிப் பெற்றது. இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் உடன் சுதா கொங்கரா இயக்கத்தில் அதர்வா நடித்த பராசக்தி 100 கோடி போஸ்டர் விடப்பட்டது. ஆனால், அதர்வா சோலோவாக நடித்து இன்னமும் அவரால் பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை கொடுக்க முடியவில்லை என்பது அவரது ரசிகர்களை வருத்தமடைய செய்கிறது. 10 கோடியை நெருங்கிய இதயம் முரளி: ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் சுமார் 40 கோடி பட்ஜெட்டில் செம செலவு செய்து எடுக்கப்பட்ட இதயம் முரளி திரைப்படம் கடந்த 3 நாட்களில் 8.55 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக சாக்னிக் தெரிவித்துள்ளது. உலகளவில் 10 கோடி வசூலை இதயம் முரளி நெருங்கி விட்டது என்று கூறுகின்றனர். வார நாட்களில் இதயம் முரளி படத்தின் வசூல் அதிகரிக்குமா? அல்லது குறையுமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. இந்த வாரம் அன்பே டயானா படம் வெளியாக காத்திருக்கிறது. ஏற்கனவே விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி 2 படமும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதயம் முரளி படத்தின் மூலம் அதர்வா தனது ஆல் டைம் வசூலை ஸ்கோர் செய்வாரா? என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும். 100 கோடி நாயகி: அதர்வா ஆரம்பித்த அதே 2010ம் ஆண்டு தான் சினிமாவில் சமந்தாவும் அவருடன் சேர்ந்து அடியெடுத்து வைத்தார். ஆனால், சமந்தா நடித்த உமன் சென்ட்ரிக் படமான 'எங்கள் தங்கம்' திரைப்படம் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே சமந்தா நடித்து வெளியான யசோதா படமும் 50 கோடி வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் தேர்வில் சொதப்பல்?: நடிகர் அதர்வா சோலோவாக நடிக்கும் படத்துக்கு நல்ல பிராமிஸிங்கான இயக்குநரை தேர்வு செய்வதில் தொடர்ந்து சொதப்பி வருவதே அவரது படங்கள் பெரிய அளவில் வசூல் செய்ய முடியாமல் திணறி வர காரணம் என்கின்றனர். பிளாஸ்ட் படத்தை இயக்கிய சுபாஷ் கே. ராஜ் போன்ற இளம் இயக்குநர்களுடன் இணைந்து நடித்தால் கூட கண்டிப்பாக அதர்வா ஒரு மிகப்பெரிய வெற்றியை அடைவார் என்கின்றனர்.More Articles