சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் திரைப்படம் அரசன். கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கும் இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. எனவே இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாகியிருக்கிறார் வெற்றி. இந்நிலையில் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. ரசிகர்களிடையேயும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

வெற்றிமாறனும், சிம்புவும் வடசென்னை படத்திலேயே இணைந்து பணியாற்றுவதாக இருந்தார்கள். ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்திலிருந்து வெளியேறிவிட்டார் எஸ்டிஆர். அதற்கு பிறகு இரண்டு பேரும் தத்தமது வழிகளில் சென்றுகொண்டிருக்கையில்; கலைப்புலி தாணு பேனரில் இரண்டு பேரும் அரசன் திரைப்படத்துக்காக இணைந்தார்கள். அனிருத் முதன்முறையாக வெற்றியின் படத்துக்கு இசையமைக்கிறார் என்பதும் ஆச்சரியமான ஒன்று. இதுவரை ஜிவி, சந்தோஷுடன் மட்டுமே அவர் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Photo Credit:

என்ன கதை?: வெற்றிமாறன் இயக்கும் படம் என்ற அறிவிப்பு வந்தாலே அந்தப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற தேடல் அனைவரிடமும் எழுந்துவிடும். அப்படித்தான் அரசன் படத்துக்கும் எழுந்தது. சென்னையில் பிரபல ரவுடியாக இருந்த மயிலை சிவா என்பவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்துதான் இப்படத்தை வெற்றி இயக்குகிறார் என்றும்; கண்டிப்பாக இது தரமான சம்பவம் செய்யும் என்றும் பலர் சொல்கிறார்கள்.

தாணுவின் நம்பிக்கை: அதேபோல் இந்தப் படத்தின் மீது தயாரிப்பாளர் தாணுவுக்கு உச்சக்கட்ட நம்பிக்கை இருக்கிறது. சமீபத்தில்கூட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர்; இப்படம் வசூலில் வரலாறு படைக்கும் என கூறியிருந்தார். வெற்றியும், சிம்புவும் சேர்ந்து வேலை செய்த விதத்தையும், படத்தின் அவுட்டையும் பார்த்துவிட்டுத்தான் அவர் இவ்வளவு உறுதியாக சொல்கிறார். தாணு நீண்ட கால அனுபவத்தை திரைத்துறையில் கொண்டிருக்கிறார். எனவே அவரது கணிப்பு கண்டிப்பாக நடக்க வாய்ப்புகள் அதிகம் என்றே தெரிகிறது.

Advertisement

இரண்டு பேருக்கும் நல்ல புரிதல்: அதுமட்டுமின்றி அரசன் திரைப்படம் வெற்றிமாறனுக்கும், சிம்புவுக்கும் இடையே நல்ல புரிதலை உண்டு செய்திருப்பதாகவும் ஷூட்டிங் ஸ்பாட்டில் பணியாற்றியவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதை எல்லாம் வைத்து பார்க்கும்போது அநேகமாக சிம்புவும், வெற்றிமாறனும் மீண்டும் இணைந்து பணியாற்றுவார்கள் என நம்பலாம். இந்தப் படத்துக்காக எஸ்டிஆர் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளியான புதிய தகவல்: இந்நிலையில் படம் பற்றி புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இன்னும் 60 நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறதாம். இப்போது வெற்றிமாறன் பிரேக் விட்டிருக்கிறார். அதனைப் பயன்படுத்தி துபாயில் உடல் எடையை குறைக்கும் வேலைகளில் எஸ்டிஆர் இறங்கியிருக்கிறாராம். படத்தின் அடுத்த ஷூட்டிங்கில் இன்னும் இளமையான தோற்றத்தில் நடிக்க வேண்டியிருப்பதால் 5 கிலோ எடையை அவர் குறைக்கவிருக்கிறாராம். வெற்றிமாறனோ இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை எடிட் செய்யும் வேலையில் பிஸியாக இருக்கிறாராம்.