சென்னை: சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கருப்பு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி மொத்தம் 300 கோடி ரூபாய் வரை வசூலித்தது. அடுத்ததாக விஸ்வநாத்&சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் சூழலில்; நேற்று படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் வெளியானது. இந்நிலையில் அந்தப் பாடலை வைத்து சூர்யாவை ட்ரோல் செய்ய தொடங்கியிருக்கிறார்கள் சோஷியல் மீடியாவில்.
சூர்யாவுக்கு இப்போதுதான் சந்தோஷமாக இருக்கும். ரெட்ரோ, கங்குவா, எதற்கும் துணிந்தவன் என கடந்த சில வருடங்களாகவே அவருக்கு ஒரு தியேட்டரிக்கல் ஹிட் கிடைக்கவே இல்லை. எவ்வளவோ முயன்றும் பலன் இல்லாததால் சோர்ந்து போகும் நிலையில் இருந்தார். அப்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் திரிஷாவுடன் கருப்பு படத்தில் நடித்தார். சாய் அபயங்கர் இசையமைக்க; ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. சில மாதங்களுக்கு முன்பு படம் வெளியானது.
மெகா ஹிட்: ரசிகர்கள் ஆசைப்பட்டது போன்று படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. கமர்ஷியல் விஷயங்களை வைத்து கல்லா கட்டிவிட்டார் ஆர்.ஜே. பாலாஜி. சூர்யாவையும் சிங்கம் படத்துக்கு பிறகு அவ்வளவு எனர்ஜியோடு கருப்பு படத்தில்தான் பலரும் பார்த்தார்கள். அனைவருமே சூப்பர் பங்களிப்பை கொடுக்க; உலகம் முழுவதும் மொத்தம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூலித்தது. இதனால் உற்சாகமடைந்த சூர்யா; இயக்குநர், இசையமைப்பாளர், கேமரா மேனுக்கு கார் பரிசளித்தார்.
அடுத்த படம்: இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்வது கூடுதல் பொறுப்பு. அது அடுத்த படத்தில் நடக்கும் என்றே நம்பலாம். ஏனெனில் விஸ்வநாத்&சன்ஸ் திரைப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கியிருக்கிறார். இதற்கு முன்னர் அவர் இயக்கிய லக்கி பாஸ்கர் பான் இந்தியா அளவில் மெகா ஹிட்டான படம். எனவே இதிலும் தரமான சம்பவத்தை செய்திருப்பார் என்று நம்பலாம். மேலும், மமிதா பைஜூ, ராதிகா, ஜிவி பிரகாஷ் என பவர் பேக்கேஜே படத்தில் பணியாற்றியிருக்கிறது.
ஆகஸ்ட்டில் ரிலீஸ்: படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் எல்லாம் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன. அதுவும் முதல் பாடலான பட்டாம்பூச்சி பாடல் வந்ததிலிருந்து பலரும் அதை ரீல்ஸாக சோஷியல் மீடியாவில் ரிலீஸ் செய்தார்கள். இப்படி எக்கச்சக்கமாக படத்தின் மீது ஹைப் ஏற தொடங்கியிருக்கிறது. ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியிருக்கிறது.
எப்படி இருக்கிறது?: தி வெட்டிங் சாங் என்ற பெயரில் வெளியாகியிருக்கும் பாடலை கென் கருணாஸ் எழுத; சூர்யாவே பாடியிருக்கிறார். அவரே பாட செய்திருப்பது அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்தான். பாடலை பொறுத்தவரை வழக்கமான ஜிவி ஸ்டைலில் மெலோடி டச்சோடு கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் இப்பாடலின் லிரிக்கல் வீடியோவில் சூர்யாவுடைய நடனத்தை பார்த்து பலரும் கலாய்க்க தொடங்கியிருக்கிறார்கள்.
என்ன ஆனது?: அதாவது நேருக்கு நேர் படத்தில் 'அவள் வருவாளா' பாடலில் நடனம் ஆடியபோது அவர் போட்ட ஸ்டெப்பை வைத்து பலரும் கிண்டல் செய்தார்கள். விவேக்கூட ஒரு மேடையில் அந்த சம்பவத்தை பகிர்ந்திருப்பார். இப்போது வெட்டிங் சாங்கில் சூர்யாவின் நடனம் ரொம்பவே மெதுவாகவும், பார்ப்பதற்கே ஒரு மாதிரியாகவும் இருக்கிறது என்றும்; நேருக்கு நேர் காலத்துக்கு போய்விட்டாரே என்றும் கமெண்ட்ஸ்களும், மீம்ஸ்களும் பறக்கின்றன.
More Articles
- ஜன நாயகன் ரிலீஸில் சூர்யா பாடிய பாட்டை கண்டுக்காம விட்டுட்டீங்களே.. மமிதாவோடு செம்ம டான்ஸ் பாஸ்
- சில விஷயங்களை சேர்க்க சொன்ன ஜோதிகா.. சூர்யா படத்தில் நடந்த மேஜிக்.. வெங்கி அட்லூரி பளிச்!
- கருப்பு வெற்றிக்கு பிறகு செம பிசினஸ்.. சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் TN ரைட்ஸ் இத்தனை கோடிகளா?
- இந்த பாடலை பாடியது உங்கள் சூர்யா.. தெலுங்கிலும் ’தி ஒன்’.. பர்த்டேவுக்கு கல்யாணா பாட்டு ட்ரீட்!
- Suriya Birthday - சூர்யா பிறந்தநாள் இன்று.. மொத்த சொத்து மதிப்பு தெரியுமா?.. இத்தனை கோடிக்கு அதிபதியா?
- Hi Release Date: சூர்யாவோடு மோத முருகனை கூப்பிட்ட கவின்.. அரிவாளோடு ஹாய் சொல்லும் நயன்.. சம்பவம் உறுதி