சென்னை: தவெக தலைவராக மாறியதில் இருந்து விஜய்யின் ஸ்டைல் ஸ்டேட்மெண்ட் ஒவ்வொன்றையும் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அலசி ஆராய தொடங்கி விட்டனர். முதலமைச்சராக மாறியுள்ள விஜய் சட்டமன்றத்தில் கோட் சூட் அணிந்த நிலையில், பீஸ்ட் படத்தில் வீரராகவன் கதாபாத்திரத்துக்கு உருவாக்கப்பட்ட அதே மாதிரியான கோட் தான் விஜய் அணிந்து வருகிறார் என்றனர்.

Advertisement

கோட் சூட்டை தாண்டி திடீரென வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமைகளில் சிஎம் விஜய் வேட்டி சட்டையை அணிந்து வருவதையை ஆரம்பித்துள்ளார் என்றும் டீகோட் செய்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், அடுத்ததாக விஜய் அணிந்துள்ள லூயிஸ் விட்டான் காஸ்ட்லி பிராண்டின் விலை குறித்து க்ரோக்கிடமே ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு க்ரோக் அளித்த பதிலும் இந்தியாவில் லூயிஸ் விட்டான் பெல்ட் விலை குறித்த விவரங்களும் ஆச்சர்யத்தை அளிக்கின்றன.

காஸ்ட்லி வாட்ச்: பொதுவாகவே அரசியல் தலைவர்கள் அணியும் காஸ்ட்லி வாட்ச் அவ்வப்போது பேசு பொருளாக மாறும். அதே போல அவர்கள் பயன்படுத்தும் கார் முதல் கண்ணாடி வரை அனைத்து விஷயங்களையும் பொதுவெளியில் அலசி ஆராய்வதை நெட்டிசன்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே வாங்காத 200 கோடி சம்பளத்தை வாங்கிய விஜய் முதலமைச்சராக மாறியுள்ள நிலையில், அவர் அணிந்து வரும் உடையின் நிறம் முதல் அவரது ஷூ மற்றும் பெல்ட் வரை பலரது பார்வைகளை கவர்ந்து வருகிறது.

Advertisement

களத்தில் இறங்கிய ஜன நாயகன்: முதலமைச்சர் விஜய் சைலண்ட் மோடிலேயே உள்ளார் என்றும் அவரது அமைச்சர்கள் மட்டுமே ஆய்வில் எல்லாம் இறங்குகின்றனர். பொம்மை முதல்வர் விஜய் என்றெல்லாம் எதிர்கட்சிகள் ஏளனமாக பேசத் தொடங்கிய நிலையில், அதிரடியாக சைதாப்பேட்டை சமூக நீதி விடுதி முதல் நேற்று சேத்துப்பட்டில் உள்ள திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்தின் இயற்கை எரிவாயு மையத்தில் ஆயுவு என அதிரடி காட்டி வருகிறார்.

Advertisement

சிஎம் விஜய் அணிந்துள்ள பெல்ட் விலை என்ன?: சேத்துப்பட்டில் விஜய் ஆய்வுக்கு வந்த போது அவர் அணிந்து வந்த நீல நிற சட்டை ஒரு பக்கம் பலரது பார்வையை கவர டக்கிங் செய்து பெல்ட் அணிந்திருந்த நிலையில், பிரபல பிராண்டான லூயிஸ் விட்டான் பிராண்டை பார்த்த ரசிகர்கள் க்ரோக் இதன் விலை என்ன? என கேட்கத் தொடங்கி விட்டனர். அதற்கு க்ரோக் ஏஐ இந்தியாவில் இதன் விலை சுமார் 66 ஆயிரம் ரூபாய் இருக்கும் என பதிலளிக்க பலரும் ஆச்சர்யத்தில் ஆடிப்போயுள்ளனர்.

லூயிஸ் விட்டான் பெல்ட் விலை: இந்தியாவில் லூயிஸ் விட்டான் பிராண்ட் பெல்ட் விலை 20 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை அதன் தரத்துக்கு ஏற்பவும் மாடலுக்கு ஏற்பவும் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டுக்கு இப்படியொரு செம ஸ்டைலிஷ் சிஎம் கிடைத்துள்ளார் என்று ரசிகர்கள் குஷியாகி வரும் நிலையில், காமராஜர் போல விஜய்யும் எளிமையை கடை பிடிக்க வேண்டும் என்கிற விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.