சென்னை: நடிகர் விஜய்யின் சித்தி மகன் தான் விக்ராந்த் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். விஜய்யை பார்த்து தான் சினிமாவுக்கு விக்ராந்தும் வந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் ரஜினிகாந்த் உடன் இணைந்து லால் சலாம் படத்தில் நடித்தாலும் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.
விக்ராந்த் ஒரு நல்ல கிரிக்கெட் வீரர். ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான எல்பிடபிள்யூ வெப்சீரிஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்லாவே கனெக்ட் ஆகியுள்ளார். 2019ல் வெளியான பக்ரீத் திரைப்படம் அவருக்கு நல்ல பாராட்டுக்களை பெற்றுத் தந்தது.
தனது அண்ணன் விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தை குடும்பத்துடன் தியேட்டரில் பார்த்த விக்ராந்த் தனது மனைவி மற்றும் மகன் அழும் காட்சிகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். கண்ணீருடன் வெளியேறும் ரசிகர்கள்: 80 பிளஸ் வயதில் இன்னமும் அமிதாப் பச்சன் நடித்துக் கொண்டிருக்கிறார். 70 பிளஸ் வயதில் ரஜினிகாந்த், மம்மூட்டி போன்ற உச்ச நட்சத்திரங்களும் சினிமாவில் அசத்தி வருகின்றனர். இந்நிலையில், 50 பிளஸ் வயதான விஜய் சினிமாவில் சாதிப்பதை தாண்ட் தன்னை இத்தனை ஆண்டு காலம் கொண்டாடிய மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய முடியுமா? என்கிற நினைப்புடன் அரசியல் கட்சித் தொடங்கி பெரிய கட்சிகளான திமுக, அதிமுகவை எதிர்த்து தனது முதல் தேர்தலிலேயே மக்களின் நம்பிக்கையை பெற்று முதலமைச்சர் ஆகியுள்ளார். அரசியலுக்கு வந்த உடனே ஜன நாயகன் தான் கடைசி படம் என அறிவித்தது போலவே இதற்கு மேல் நடிக்க மாட்டார் என்பதால் இனிமேல் விஜய் படத்தோட FDFS பார்க்க முடியாதே என ரசிகர்கள் படம் முடிந்து வெளியே வரும் போது கண்ணீருடன் வரும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. குடும்பத்துடன் அழுத விக்ராந்த்: திருமணமாகி 10 ஆண்டுகளில் என் கணவர் இதுவரை ஒருமுறை கூட அழுது பார்த்ததில்லை. இன்று விஜய்க்காக அழுகிறார் என ஒரு பெண் பேசிய வீடியோவும் அவரது கணவர் அழுத வீடியோவும் வைரலான நிலையில், அதே போல பல இடங்களில் பல கண்ணீர் சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில், விஜய் தம்பியான விக்ராந்த் தனது குடும்பத்துடன் ஜன நாயகன் படத்தை தியேட்டரில் பார்த்து அழும் காட்சிகளை வெளியிட்டுள்ளார். மகன் நல்லா வளர்ந்துட்டாரே: நடிகர் விக்ராந்த் நடிகை மானசாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில், மகன் யாஷுவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், ஜன நாயகன் படத்தை பார்த்து பிறந்தநாளில் யாஷு அழுத காட்சிகளும் அம்மா அப்பாவுடன் அவர் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் விக்ராந்த் வெளியிட்டு தனது மகன் நன்கு வளர்ந்துவிட்டார் என்பதை பார்த்து பெருமைப்பட்டு பதிவிட்டது வைரலாகி வருகிறது. சீக்கிரமே விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போல விக்ராந்த் மகனும் சினிமாவுக்கு வருவாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.More Articles