சென்னை: விஷால் கோலிவுட்டின் வளர்ந்த ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான மதகஜராஜா, ரத்னம், மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் ரத்னம் தவிர்த்து மற்ற படங்கள் மெகா ஹிட்டாகின. அடுத்ததாக மகுடம், புருஷன், துப்பறிவாளன் 2 ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. இந்நிலையில் அவரது பேட்டி வைரலாகியிஉர்க்கிறது.

Advertisement

இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு சினிமாவுக்கு வந்து அர்ஜுனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் விஷால். ஆனால் காலம் அவரை ஹீரோவாக மாற்றியது. அப்படி அவர் செல்லமே படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு சண்டக்கோழி, தாமிரபரணி, திமிரு என வரிசையாக ஹிட்டுகளை கொடுத்தார். மேலும் பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக மாறக்கூடிய அத்தனை சாராம்சங்களும் அவரிடம் இருக்கின்றன என்று பலரது கவனத்தை ஈர்த்தவர்.

Advertisement

Photo Credit:

தடுமாறிய விஷால்: பெரிதாக வந்துவிடுவார் என்று கணித்திருந்த நேரத்தில் திடீரென அவருக்கு சறுக்கல் ஏற்பட்டது. இருப்பினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தார். அதிலும் பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் நடித்தபோது கண்களில் குறைபாடுடைய ரோலை ரொம்பவே கஷ்டப்பட்டு செய்திருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் ஓடவில்லை. அப்போதிருந்து அவருக்கு கண்களில் பிரச்னை என்றும் கூறப்படுகிறது.

பல வருடங்கள் கழித்து ஹிட்: அதுமட்டுமின்றி அப்படத்துக்கு பிறகு அவர் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தன. இப்படிப்பட்ட நிலைமையில்தான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார். டைம் ட்ராவல் ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று நூறு கோடி ரூபாய் வசூலித்தது. இதற்கிடையே கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் அவர் நடித்திருந்த மதகஜராஜா படம் கடந்த வருட பொங்கலுக்கு ரிலீஸாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.

Advertisement

சாய் தன்ஷிகாவுடன் திருமணம்: இதற்கிடையே விஷாலுக்கும், சாய் தன்ஷிகாவுக்கும் இடையே காதலும் மலர்ந்தது. அவர்கள் இரண்டு பேரும் கடந்த வருடத்திலேயே திருமணம் செய்துகொள்வார்கள் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. இன்னும் நடக்கவில்லை. கூடிய விரைவில் அவர்கள் திருமணம் நடக்கும் என தெரிகிறது. இந்நிலையில் அவரது பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

விஷால் சொன்னது: அவர் அந்தப் பேட்டியில், "என்னை பொறுத்தவரை பாலா அண்ணன் வந்து குதி என்று சொன்னாலும் குதித்துவிடுவேன். அவர் மீது தீராத அன்பு எப்போதும் உண்டு. ஆனால் அந்த அவன் இவன் கேரக்டர் மாதிரி செய்யமாட்டேன். அதற்காக வைத்த மாறு கண்ணால் இன்னமும் தலைவலி இருக்கிறது. ஆனால் பாலாவின் படத்தில் நடிக்க ஆர்வம் இருக்கிரது. அவரது படங்களில் நடிக்கும்போது ஹார்வர்டு யுனிவர்சிட்டியில் படிப்பது போன்று இருக்கும். ஒரு பெண்ணாக 14 நாட்கள் அவன் இவன் படத்தில் நடித்தேன். 13வது நாளில் நானே பெண்ணாக மாறியது போல் உணர்ந்தேன்" என்றார்.