சென்னை: தமிழ் சினிமா உலகில் பொதுவாகவே முன்னணி நடிகர்களாக உள்ள நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ரசிகர்களுக்கு இடையிலான சண்டைகள் என்பது வாடிக்கையாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் அஜித் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையிலான சண்டை என்பது சமூக வலைதளங்களை கடந்து பல நேரங்களில் திரைப்படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆகும்போது தியேட்டர் வளாகங்களிலேயே அடிதடி சண்டைகளை பார்த்திருக்கிறோம். இப்படி இருக்கையில் கடந்த சில தினங்களாக இணையதளத்தில் அஜித் ரசிகர்களை காணவில்லை, அஜித் ரசிகர்கள் என்ற இனமே அழிந்து விட்டது போன்ற மீம்களை பதிவிட்டு ட்ரோல் செய்து வருகிறார்கள்.
ஆனால் இந்த ட்ரோல்களுக்கும் அஜித் ரசிகர்களை இப்போது தேடுவதற்கும் இருக்கும் காரணங்கள் என்பது முழுக்க முழுக்க மற்ற நடிகர்களின் ரசிகர்களும் கற்றுக் கொள்ள வேண்டியவை. அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே நடக்கும் சமூக வலைதளச் சண்டைகள் என்பது அஜித் மற்றும் விஜய் என இருவரின் சினிமா கெரியர், சினிமா பாடல்கள், சினிமா டயலாக்குகள் மூலம் கொம்பு சீவி விடப்பட்டவை என்பதை தயக்கமின்றி ஒப்புக் கொள்ள வேண்டும். அதிலும் அஜித் ஒரு கட்டத்திற்கு மேல் அப்படியான கொம்பு சீவுதலை முற்றிலுமாக கைவிட்டுவிட்டார். ஆனால் விஜய் அதனை தொடர்ந்து செய்து கொண்டு வந்தார்.
Fan War: அதுவும் தனது படங்களின் ஆடியோ ரிலீஸ்களின் போது விஜய்யின் மேடைப்பேச்சுக்கள் அஜித்தை விட்டுவிட்டு ரஜினியை டார்கெட் செய்வதாக இருந்தது. இதனால் Fan War என்பது ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களுக்கு மத்தியில் ஏற்பட்டது. அதற்கு ரஜினியின் மேடைப் பேச்சுக்களும் தீனி போட்டது என்றே கூறலாம். அஜித் ரசிகர்களை காணவில்லை: சரி, அஜித் ரசிகர்களுக்கு என்ன ஆச்சு? பொதுவாக விஜய் படம் வெளியாகும்போது அஜித் ரசிகர்கள் இணையத்தில் விஜய் ரசிகர்களுடன் மல்லுக்கு நிற்பதை கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம். அப்படி இருக்கையில் விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படம் வெளியாகி உள்ள இந்த காலத்தில் ஜன நாயகன் படம் குறித்த ட்ரோல்கள், எதிர்மறை விமர்சனங்கள் என எதையுமே அஜித் ரசிகர்கள் பகிரவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்கும் அளவுக்கு டீப் கப் சிப்பில் இருக்கிறார்கள். காரணமே அஜித்தா?: இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்? அஜித் தனது சமீபத்திய பேட்டிகளில் தொடர்ந்து கூறிக் கொண்டு வருகிறாரே, உங்க குடும்பத்தை பாருங்க, நீங்க நல்லா வாழுங்க, அஜித் வாழ்க், விஜய் வாழ்கனு சொல்லிட்டு இருக்காதீங்க, நல்லா படிங்க, நல்லா வேலைக்கு போங்க என தொடர்ந்து அறிவுரை கூறிக் கொண்டே வந்தார். இது மட்டும் இல்லாமல் தனது கார் பந்தயப் போட்டிகளைப் பார்க்க வந்த அவரது ரசிகர்களை ஒரு ராணுவ முகாம் போல நடத்தினார். அஜித் வழியில்: இப்படி இருக்கையில் தங்களது அபிமான நடிகரான அஜித் தான் தனது வாழ்க்கையை தனது விருப்பம் போல வாழ்வது போல, நம்மையும் ஒழுக்கமாகவும் நிம்மதியாகவும் வாழச் சொல்கிறார். அப்படி இருக்கையில் நாமும் அதன் வழி வாழ்வது சரி என்ற முடிவுக்கு அஜித் ரசிகர்கள் வந்திருக்கலாம். இது மட்டும் இல்லாமல் இது விஜய்யின் கடைசி படம் என்பதால் அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல திரையுலகில் உள்ள மற்ற நடிகர்களின் ரசிகர்களும் படத்தை மோசமாக ட்ரோல் செய்யவில்லை, விஜய் ரசிகர்களுடன் வம்புச் சண்டைக்கு செல்லவில்லை. மாறாக சிலர் மட்டும் அரசியல் காரணங்களுக்காக அஜித் ரசிகர்களை காணவில்லை என்று கவலைப்பட்டு வருவதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது. மொத்ததில் அஜித் ரசிகர்கள் அஜித்தை போலவே ஜென்டில்மேனாக மாறிவிட்டனர் என்பது இந்த சம்பவங்களின் மூலம் உறுதி ஆகி உள்ளது.More Articles