சென்னை: யூடியூப்பில் ஹிட் அடித்த 'ஆஹா கல்யாணம்' வெப் சீரிஸில் 'பவி டீச்சர்' என்ற ஒற்றைக் கதாபாத்திரத்தின் மூலம் ஒட்டுமொத்தத் தமிழக இளைஞர்களின் இதயங்களைக் கொள்ளையடித்தவர் நடிகை பிரிகிடா சாகா. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் வளர்ந்து வரும் முக்கிய நடிகையாக வலம் வரும் இவருக்கு, தற்போது க நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
சினிமாவில் பிஸியாக நடித்து வந்த பிரிகிடா, தனது நீண்ட நாள் ரகசியக் காதலைக் கடந்த வாரம் சோசியல் மீடியாவில் அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். அவரின் காதலர் வேறு யாரும் இல்லை ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்த சூப்பர் ஹிட் படமான 'மீசையை முறுக்கு' படத்தில், ஆதிக்கு தம்பியாக சுதாகர் ரோலில் நடித்த நடிகர் அனந்த் தான் பிரிகிடாவின் மனதைக் கவர்ந்த அந்த காதலர். தற்போது இவர்கள் இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
உருகிய பிரிகிடா: தங்களது நிச்சயதார்த்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பிரிகிடா வெளியிட்டுள்ளார். அதில். இது எங்கள் வாழ்வின் மிக மகிழ்ச்சியான தருணம். இன்று, எங்கள் குடும்பத்தினரின் ஆசியுடன், எங்களை வளர்த்த குடும்பங்களையும் எங்களை ஒன்றிணைத்த காதலையும் போற்றும் வகையில், இருவரது கலாச்சார முறைப்படியும் (Dual Customs) எங்கள் நிச்சயதார்த்தம் வெற்றிகரமாக நடந்தது. எங்கள் புதிய பயணத்தை மிகுந்த அன்புடன் ஏற்றுக்கொண்ட உங்கள் ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றி. நீங்கள் அனுப்பிய வாழ்த்துகளைப் படித்தோம், உங்கள் தூய்மையான அன்பை உணர்ந்தோம்; அதற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இங்கிருந்து எங்கள் வாழ்நாள் பந்தம் தொடங்குகிறது என்று பதிவிட்டுள்ளார்.
வாழ்த்துக்கள்: நடிகை பிரிகிடா மாஸ்டர், இரவின் நிழல்,கருடன் போன்ற படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். பிரிகிடாவும், இணைந்து தங்களது புதிய வாழ்க்கையைத் தொடங்கவிருக்கும் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் வாழ்த்துகள் பவி டீச்சர்... அனந்துடன் உங்கள் வாழ்க்கை சிறக்கட்டும் என வாழ்த்துகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.
More Articles
- ஆடையே இல்லாமல் நடிச்சாச்சு.. இதெல்லாம் ஒரு விஷயமா? கிளாமரா போஸ் கொடுத்த இரவின் நிழல் பட நடிகை!
- கீர்த்தி சுரேஷ் முதல் பிரிகிடா வரை.. இந்த ஆண்டு ‘A' சான்றிதழ் படங்களில் மிரட்டிய டாப் 5 நடிகைகள்!
- தப்பா பேசிவிட்டேன்..மன்னித்துவிடுங்கள்..கண்கலங்கிய இரவின் நிழல் பிரிகிடா!
- துரைமுருகன் வீட்டு சம்பந்தி ஆகிறார் தயாரிப்பாளர் கண்ணன் ரவி.. பிரம்மாண்டமாக நடந்த நிச்சயதார்த்தாம்
- Prtivi Shaw: நிச்சயதார்த்தம் நின்னுப்போச்சு.. ஆக்ரித்தி அகர்வாலை ஏமாற்றினாரா பிரபல கிரிக்கெட் வீரர்?
- அண்ணா சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை யார் பாருங்க!