சென்னை: நடிகை காஜல் அகர்வால், பாலிவுட்டில் ஷ்ரேயாஸ் தல்படேவுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'தி இந்தியா ஸ்டோரி'. சாகர் பி. ஷிண்டே தயாரிப்பில், டி.கே. சேட்டன் இயக்கத்தில், முன்னணி நிறுவனமான ஜீ ஸ்டூடியோஸ் வெளியிடும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பான்-இந்திய அளவில் வரும் ஜூலை 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நோ பிகினியில்: சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட காஜல் அகர்வால், எனக்குப் பிகினி ஆடைகளில் நடிப்பதில் துளியும் உடன்பாடு இல்லை. அது முற்றிலும் எனது தனிப்பட்ட விஷயம் என்று நான் ஆழமாக நம்புகிறேன். அந்த மாதிரியான மிகக் கவர்ச்சியான தோற்றத்தில் பெரிய திரையில் தோன்றுவதில் எனக்குச் சிறிதும் விருப்பமில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும் படங்களில் வைக்கப்படும் படுக்கையறை மற்றும் லிப்லாக் போன்ற நெருக்கமான காட்சிகள் பற்றி கவலை இல்லை. படங்களில் அளவுக்கு அதிகமான நெருக்கமான காட்சிகளில் நடிப்பதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. அதுதான் நான் எனக்காக வகுத்துக் கொண்ட முக்கிய எல்லை. அந்த எல்லையை மீறும் வகையான காட்சிகள் ஏதேனும் ஒரு கதையில் இருந்தால், இயக்குனரிடம் இந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று ஆரம்பத்திலேயே ஓப்பனாகச் சொல்லிவிடுவேன் என்று காஜல் அகர்வால் கூறினார்.
பழனி டூ இந்தியன் 2: தமிழில் பேரரசு இயக்கத்தில் பரத் நடித்த பழனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் கதாநாயகியாக அடியெடுத்து வைத்த காஜல் அகர்வால். தொடர்ந்து கார்த்தியுடன் நான் மகான் அல்ல, சூர்யாவுடன் மாற்றான், தளபதி விஜயுடன் துப்பாக்கி, ஜில்லா, 'மெர்சல், அஜித் குமாருடன் விவேகம், ஜெயம் ரவியுடன் கோமாளி மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 எனத் தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி மாஸ் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து டாப் ஹீரோயினாக வலம் வந்தார்.
திருமணத்திற்குப் பிறகு தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மும்பையில் செட்டிலாகியுள்ள காஜல், தென்னிந்தியப் படங்களைக் குறைத்துக் கொண்டு தற்போது பாலிவுட் படங்களில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறார். திருமணத்திற்குப் பிறகும் கவர்ச்சிக்குத் தடா போட்டு, நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கும் காஜலின் இந்த அணுகுமுறையை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
More Articles
- காஜல் அகர்வாலின் தி இந்தியா ஸ்டோரி கதை என்ன தெரியுமா? எப்போ ரிலீஸ்?
- இந்தியன் 3 வரலைன்னா என்ன?.. காஜல் அகர்வாலின் ‘தி இந்தியா ஸ்டோரி’ எப்போ ரிலீஸ் பாருங்க!
- வெளிநாட்டில் கணவருடன் லூட்டி அடிக்கும் காஜல் அகர்வால்.. லைக்குகளை அள்ளும் போட்டோஸ்!
- விபத்தில் சிக்கினாரா காஜல் அகர்வால்? பதறிய ரசிகர்கள்.. நடிகை கொடுத்த விளக்கம்!
- அய்யோ பாவமே.. காஜல் அகர்வாலுக்கு என்ன ஆச்சு.. இணையத்தில் பரவும் வதந்தி என்ன?
- Thaththuvamasi : ரோஜா இறங்கி குத்திய கிளாமர் பாட்டில்.. இப்படி ஒரு வாழ்க்கைத் தத்துவமா..