சென்னை: மங்காத்தா, காஞ்சனா போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பிரபல நடிகை ராய் லட்சுமி, தற்போது தொழிலதிபராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில், 'La Ra' என்ற புதிய டேட்டிங் மற்றும் நெட்வொர்க்கிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

Advertisement

நடிகை ராய் லட்சுமி: திரைப்படங்களில் நடித்துக்கொண்டே தொழிலதிபர்களாக பல நடிகைகள் இருக்கிறார்கள் அந்த வரிசையில் நடிகை ராய் லட்சுமி தொழிலதிபராக களமிறங்கி உள்ளார். தற்போது இவர், 'ஹவுஸ் பை லாரா' நிறுவனத்தின் மூலம் இந்த புதிய 'La Ra' செயலியைத் தயாரித்துள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில், தனது சக இணை நிறுவனர்களான டெய்சி மோர்கன் மற்றும் சாண்டி ஆகியோருடன் இணைந்து இந்தச் செயலியை ராய் லட்சுமி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

Advertisement

டேட்டிங் ஆப்: தற்போது சோஷியல் மீடியா மற்றும் டேட்டிங் ஆப்-களில் போலி கணக்குகள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த 'La Ra' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முற்றிலும் சரிபார்க்கப்பட்ட கணக்குகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இதன் மூலம் பயனர்கள் பயமின்றி நம்பிக்கையுடன் தங்களுக்குப் பிடித்தமானவர்களைத் தேர்வு செய்யலாம். உண்மையான அன்பு, காதல், உண்மையான நட்பு மற்றும் நீண்டகால வாழ்க்கைத் துணையைத் தேடுபவர்களுக்கு இந்தச் செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Photo Credit:

சிங்கிளா வாங்க சந்தோஷமா போங்க: ஆப்பை அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு பேசிய நடிகை ராய்லட்சுமி, ஒருவர் ரிலேஷன்ஷிப்பில் இருக்க விரும்பினால் அவர்களுக்கு வழிகாட்டியாக இந்த ஆப் இருக்கும், பல விதமான டேட்டிங் ஆப்கள் இருக்கின்றன. ஆனால், அவை நம்பிக்கைக்குரியதாக இல்லை, அதுமட்டுமின்றி, வெறும் டேட்டிங் ஆப்-ஆக மட்டுமில்லாமல், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் தொழில்முறை நபர்களை இணைக்கும் 'நெட்வொர்க்கிங்' தளமாகவும், நிஜ சந்திப்புகளை உருவாக்கும் தளமாகவும் இது செயல்படும். பலரும் தனிமையிலேயே இருக்கிறார்கள், பாட்னர் இருந்தாலும் அவர்கள் தனிமையில் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒருங்கினைப்பது தான் இந்த 'La Ra'. இந்த ஆப்குள் இணைந்துவிட்டால் நிச்சயமாக நீங்கள் தனியாகவோ சிங்கிளாகவோ இருக்க மாட்டீங்க என நடிகை லட்சுமி ராய் அதில் பேசி உள்ளார். ஆனால், இணையவாசிகள் பலர் சிங்கிளா வாங்க சந்தோஷமா போங்க என்றும், இது தேவையில்லாத ஒன்று, இளைஞர்களை கெடுக்கும் இதுபோன்ற ஆப்களை ஊக்குவிக்கக்கூடாது என்றார்.