சென்னை: பார்ப்பதற்கு ஹாலிவுட் நடிகை போலவே செம்ம மாடர்னாகக் காட்சியளித்தாலும், நடிகை லட்சுமி ராய் முதன்முதலில் அறிமுகமானது என்னமோ 'கற்க கசடற' என்ற தமிழ் படத்தின் மூலம் கோலிவுட்டுக்குள் காலடி எடுத்து வைத்தார். முதல் படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்குப் பெரிய வெற்றியைத் தரவில்லை. இருப்பினும், அடுத்தடுத்து கணிசமான திரைப்படங்களில் நடித்துத் திரையுலகில் தனக்கென ஒரு பெயரை எடுத்தார்.
நடிகை ராய் லட்சுமி: ஆனால், ஒருகட்டத்திற்கு மேல் தமிழ் சினிமாவில் இவரால் ஒரு நிலையான அல்லது முன்னணி இடத்தைப்பிடிக்க முடியாமல் போனது. இதனால் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற லட்சுமி ராய், அங்கும் கணிசமான திரைப்படங்களில் நடித்து வந்தார். எனினும் இவருடைய நடிப்பு அந்த அளவுக்குப் பேசப்படாததால், அங்குப் பெரும்பாலான படங்களில் ஒரு கவர்ச்சி நடிகையாகவே வலம் வரத் தொடங்கினார். நம்ம பெயரில் தான் ஏதோ பிரச்சனை இருக்கிறது எனத் தீவிரமாக யோசித்த லட்சுமி ராய், தன் பெயரை 'ராய் லட்சுமி' என மாற்றிக் கொண்டாலும் இவருக்குப் பட வாய்ப்புகள் தொடர்ந்து வரவில்லை. இதனால் பாலிவுட்பக்கமும் சென்று ஒரு கை பார்த்தார். அங்கு கவர்ச்சிக் காட்டி நடித்த போதிலும், சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இவருடைய நடிப்பில் எந்தவொரு ஹிட் படமும் வெளியாகவில்லை.
வெள்ளை நிற உடைகள்: சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்றாலும், சோசியல் மீடியாவில் எப்போதுமே படுஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி, இன்ஸ்டாகிராமில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களைப் பதிவிடுவதை ஒரு வாடிக்கையாகவே வைத்துள்ளார். வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் காட்டி வரும் ராய் லட்சுமி, தற்போது இன்ஸ்டா பக்கத்தில், தேவதை போலப் பளபளக்கும் வெள்ளை நிற ஆஃப்-ஷோல்டர் கிராப் டாப் மற்றும் ஸ்கர்ட் அணிந்து அட்டகாசமாகப் போஸ் கொடுத்திருக்கிறார். காற்றில் பறக்கும் சுருள் முடி, இடையழகு மற்றும் காந்தப் பார்வையுடன் அவர் கொடுத்துள்ள இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும், அவரது அழகை வர்ணித்து லைக்குகளைக் குவித்து இணையத்தில் வேகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
More Articles
- Raai Laxmi: அலேக்காக குதிரையில் ஏறி சவாரி.. கடற்கரையை சூடாக்கிய ராய் லட்சுமி!
- இது என்ன பிகினியா.. இல்ல டாப்பா.. குழப்பத்தை ஏற்படுத்திய ராய் லட்சுமி!
- Raai laxmi: உள்ளாடை தெரிய க்யூட் போஸ்.. ராய் லட்சுமிக்கு மட்டும் வயசே ஆகாதா!
- Raai Laxmi: சரக்குடன் செம மஜாவாக பார்ட்டி பண்ண ராய் லக்ஷ்மி.. அவரே வெளியிட்ட போட்டோ!
- வெயில் அதிகம் தான் அதுக்குன்னு இவ்ளோ ஓபனாவா..இதெல்லாம் டூ மச் ..ராய் லட்சுமியை கலாய்க்கும் பேன்ஸ்!
- எல்கேஜி பாப்பா கூட இந்த டிரஸ் போடாதே..ராய் லட்சுமியை கலாய்க்கும் ஃபேன்ஸ்!