சென்னை: சீதாராமம் படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் மிருணாள் தாகூர். அவரது அழகும், திறமையும் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. அதனையடுத்து பாலிவுட்டில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார். அதற்கு பலனாக வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. இது ஒருபக்கம் இருக்க அவரும், நடிகர் தனுஷும் காதலிப்பதாக ஒரு தகவல் தொடர்ந்து ஓடியது. அது வதந்தி என்று பின்னர் உறுதியானது. இந்நிலையில் அவர் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

மராத்தி மற்றும் ஹிந்தி மொழிகளில் நடிகையாக பயணத்தை ஆரம்பித்த மிருணாள் தாகூருக்கு தெலுங்கில் சீதாராமம் படம் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. தெலுங்கிலிருந்து மற்ற தென்னிந்திய மொழிகளுக்கும் டப் செய்யப்பட்டது. மிருணாளின் அழகும், நடிப்பும் அனைவரையும் வசீகரித்துவிட்டது. அதன் காரணமாக அனைவருமே அவரை கொண்டாடி தீர்த்தார்கள்.அவரை க்ரஷ் லிஸ்ட்டில் சேர்த்தவர்களும் அதிகம்.

Advertisement

பிஸியான நடிகை: அந்தப் படத்தின் சமயத்தில் சோஷியல் மீடியா ரிலீஸ்களில் அவர்தான் இருந்தார். இதன் காரணமாக தென்னிந்திய மொழிகளில் அதீத கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது கவனம் பாலிவுட்டிலேயே தொடர்ந்தது. அதன் பலனாக தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஹிட்டோ, தோல்வியோ அவரது மார்க்கெட் சீராகவே இருக்கிறது என திரைத்துறையினர் சொல்கிறார்கள். தென்னிந்திய மொழிகளை பொறுத்தவரை அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ இயக்கும் ராக்கா படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.

Advertisement

தனுஷுடன் கிசுகிசு: செம பிஸியாக இருக்கும் அவரை சுற்றி சமீபமாக காதல் கிசுகிசுக்கள் அதிகம் ஓடுகின்றன. முதலில் நடிகர் தனுஷுக்கும், மிருணாளுக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறி டேட்டிங் எல்லாம் செல்கிறார்கள் என்று பேசப்பட்டது. மேலும் திருமணம் நடக்கவிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடியது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டார் மிருணாள்.

எழுதப்பட்ட தியரி: அதுமட்டுமின்றி தனுஷின் சகோதரிகளை மிருணாள் இன்ஸ்டாவில் ஃபாலோ செய்ததன் காரணமாக அவரை வீட்டில் ஒருவராகவே ஏற்றுக்கொள்வதற்கான அறிகுறிதான் அது என்றெல்லாம் தியரி எழுதினார்கள் சிலர். ஒருகட்டத்தில் இந்த விஷயம் எல்லை மீறி போனதைத் தொடர்ந்து மௌனத்தை கலைத்தார் மிருணாள். அவர் ஒரு பேட்டியில், இந்த விஷயத்தில் தனக்கு அதீதமான விளம்பரம் கிடைத்ததாகவும்; தனுஷுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அவர் மீது காதல் எல்லாம் இல்லை என்றும் போட்டு உடைத்திருந்தார்.

Advertisement

புதிய கிசுகிசு: அதனையடுத்து அனைவரும் சைலெண்ட் ஆனார்கள். இந்நிலையில் சைலெண்ட்டானவர்களை மீண்டும் பேச வைக்கும்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது மும்பையில் இருக்கும் பூஜி கஃபேவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் யெஷஸ்வி ஜெய்ஸ்வால் சென்றிருக்கிறார். அதே கஃபேவுக்கு மிருணாளும் அதே நேரத்தில் சென்றிருக்கிறார். அதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

உடனே இதை வைத்தும் புதிய பேச்சுக்கள் கிளம்பியிருக்கின்றன. அதாவது, 9 வயது குறைவானவருடன் 33 வயதான மிருணால் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்றும்; விரைவில் அதிகாரப்பூர்வமாக அவர்களது ரிலேஷன்ஷிப் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் எதார்த்தமாக கூட அந்த இடத்துக்கு இரண்டு பேரும் ஒரே நேரத்தில் சென்றிருக்கலாம் என்பதையும் கவனிக்க வேண்டும். எனவே இப்போதைக்கு எதையும் உறுதியாக சொல்ல முடியாது என்பதால் இது கிசுகிசு என்ற நிலையிலேயே இருக்கிறது.