சென்னை: தமிழில் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகைகளில் எமி ஜாக்சனும் ஒருவர். அதன்பிறகு ஐ, தங்க மகன், தெறி, 2.0 என முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர், தமிழ் ரசிகர்களிடம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார். தற்போது திரைப்படங்களில் அதிகம் நடிக்காவிட்டாலும், சமூக வலைதளங்களில் அவர் பகிரும் ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
திருமணத்திற்குப் பிறகு குடும்ப வாழ்க்கையில் அதிக நேரம் செலவிட்டு வரும் எமி ஜாக்சன், இரண்டு மகன்களுடன் இருக்கும் தருணங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். தற்போது வீக்கெண்ட் விடுமுறையை குடும்பத்துடன் கடற்கரை ரிசார்ட்டில் கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
வெளியான புகைப்படங்களில், தனது இரண்டு மகன்களையும் கட்டிப்பிடித்து முத்தமிடும் எமி ஜாக்சன், அவர்களுடன் கடற்கரையில் விளையாடுவது, நீரில் ஜாலியாக நேரத்தை செலவிடுவது, ரிசார்ட்டில் லூட்டி அடிக்கும் தருணங்கள் என பல அழகான நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். ஒரு புகைப்படத்தில் இளைய மகனை தோளில் தூக்கிக்கொண்டு முத்தமிடும் காட்சியும், மற்றொரு புகைப்படத்தில் இரண்டு மகன்களும் அம்மாவை சுற்றி ஓடி விளையாடும் தருணமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சூப்பர் அம்மா: "இரண்டு ஆம்பள பசங்க வீட்டில் இருந்தா அம்மாவுக்கு ஓய்வே இருக்காது போல", "சூப்பர் மாம்", "குழந்தைகளோடு இருக்கும் எமியைப் பார்ப்பதே வேற லெவல்", "இதுதான் உண்மையான சந்தோஷம்" என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகளுடன் அவர் இயல்பாக பழகும் விதம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. FIFA Final - ஸ்பெயின் வெற்றி.. விஜய் கட்சி கொடி கலர் காரணமாம்.. நினைப்பானாலும் ஒரு நியாயம் வேண்டாமா? பிசி நடிகை: தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் மிகவும் பிஸியான நடிகையாக இருந்த எமி ஜாக்சன், மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு விக்ரம், விஜய், தனுஷ், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர், 2.0 திரைப்படத்தின் மூலம் உலகளாவிய கவனத்தையும் பெற்றார். அதன் பிறகு ஹாலிவுட் மற்றும் சர்வதேச வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். குடும்ப வாழ்க்கை: திரைப்படங்களைவிட தற்போது குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் எமி ஜாக்சன், அவ்வப்போது தனது குழந்தைகளுடன் இருக்கும் அழகான தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். இந்த வீக்கெண்ட் புகைப்படங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. குறிப்பாக இரண்டு மகன்களுடன் அவர் செலவிட்ட இந்த கியூட் தருணங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.More Articles