சென்னை: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி 2 திரைப்படம் கட்டா குஸ்தி படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷாலுக்கு ஒரு பக்காவான வெற்றிப் படமாக மாறியுள்ளது. கட்டா குஸ்தி திரைப்படம் 5 கோடி பட்ஜெட்டில் எடுத்து 30 கோடி வரை வசூல் ஈட்டியது.

Advertisement

இந்நிலையில், கட்டா குஸ்தி 2 படத்தை செல்லா அய்யாவு 20 கோடி பட்ஜெட்டில் எடுத்த நிலையில், இதுவரை 44.5 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக விஷ்ணு விஷால் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Advertisement

வேல்ஸ் நிறுவனம் மற்றும் விஷ்ணு விஷால் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்தது. படத்தின் வெற்றி விழாவில் விஷ்ணு விஷாலுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இயக்குநர் செல்லா அய்யாவுக்கு தங்கச் சங்கிலி பரிசாக வழங்கப்பட்டது.

ஐஸ்வர்யா லக்‌ஷ்மிக்கு வெள்ளிக் காயின்: ஆனால், படத்தின் முக்கிய பலமான ஐஸ்வர்யா லக்‌ஷ்மிக்கு வெறும் வெள்ளிக் காயின் மட்டுமே பரிசாக கொடுத்தனர் என்றும் இயக்குநர் மற்றும் ஹீரோவுக்கு கொடுத்தது போல வெயிட்டான பரிசுப் பொருள் ஐஸ்வர்யா லக்‌ஷ்மிக்கு வழங்கப்படவில்லை என்று அவரது ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

படத்தின் பலமே அவர் தான்: கட்டா குஸ்தி படம் வெற்றிப் பெறவும் அதன் 2ம் பாகமான கட்டா குஸ்தி ஹிட் அடிக்கவும் முக்கிய காரணமே ஐஸ்வர்யா லக்‌ஷ்மி தான். கடைசியாக சூரியின் மாமன் படத்தின் வெற்றிக்கும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் அசத்தலான நடிப்பு மிகப்பெரிய உதவியாக இருந்தது. இந்நிலையில், ஐஸ்வர்யா லக்‌ஷ்மிக்கு வெறும் சம்பளம் மட்டும் தானா என்றும் படம் 50 கோடி வரை வசூல் ஈட்டப் போகிறது. அவருக்கும் ஒரு பெரிய பரிசு கொடுத்தால் சிறப்பாக இருக்குமே என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

வித் லவ், தலைவர் தம்பி தலைமையில் பீட் பண்ணியாச்சு: விஷ்ணு விஷாலுக்கு கடைசியாக வெளியான லால் சலாம் மற்றும் ஆரியன் உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்த நிலையில், கட்டா குஸ்தி 2வை அவர் கையில் எடுத்ததே வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே. விஜய், த்ரிஷா நடித்த கில்லி படத்தில் இடம்பெற்ற "அப்படிப்போடு" பாடலை படத்தில் 2 இடங்களில் பக்காவாக வைத்து ஒட்டுமொத்த தியேட்டரையும் கொண்டாட வைத்த நிலையில், 40 கோடி வசூல் செய்த தலைவர் தம்பி தலைமையில் மற்றும் வித் லவ் படங்களை வசூலில் பின்னுக்குத் தள்ளி கட்டா குஸ்தி 2 டாப் பட்டியலில் முன்னேறியுள்ளது. பிளாஸ்ட், யூத், தாய் கிழவி உள்ளிட்ட படங்களின் வசூலை கடக்குமா என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.