சென்னை: செல்லா அய்யாவு இயக்கி விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்த கட்டா குஸ்தி 2 திரைப்படம் கடந்த வாரத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. எனவே விஷ்ணு விஷாலுக்கு காரும், இயக்குநருக்கு தங்க செயின், பிரேஸ்லெட்டும் வழங்கினார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். ஆனால் படத்தின் பலமே ஐஸ்வர்யா லட்சுமிதான். அவருக்கு தயாரிப்பாளர் கொடுத்த பரிசு இப்போது விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
தமிழ் மற்றும் மலையாளத்தில் பிஸியான நடிகையாக இருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி. இரண்டு மொழிகளிலும் பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். அழகு மட்டுமின்றி திறமையுள்ள நடிக்க தெரிந்த நடிகை என்ற பெயரை பெற்றவர் அவர். தமிழில் அவருக்கு மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கேரக்டர் கிடைத்தாலும்; அதில் பெரிய அளவில் அவரால் ஸ்கோர் செய்ய முடியவில்லை. இதனால் அவர் கொஞ்சம் அப்செட்தான் ஆனார்.
கட்டா குஸ்தி மாஸ்: அதேசமயம் கட்டா குஸ்தி திரைப்படமோ ஐஸ்வர்யாவுக்கு வேறு லெவலில் பெயர் பெற்றுக்கொடுத்தது. அப்படத்தில் அட்டகாசமான சண்டை காட்சிகளில் எல்லாம் நடித்து அசரடித்திருந்தார். தமிழுக்கு மீண்டும் ஒரு விஜயசாந்தி கிடைத்துவிட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். அந்தப் படத்தின் வெற்றிக்கு கதை ஒரு காரணம் என்றால்; இன்னொரு காரணம் ஐஸ்வர்யாவின் நடிப்பும், அவரது கேரக்டர் வடிவமைக்கப்பட்டதும்தான்.
கட்டா குஸ்தி 2: இப்போது அவர் கட்டா குஸ்தி 2 திரைப்படத்தில் நடித்திருக்கிறார். முதல் பாகமே போன்றே இதிலும் தன்னுடைய கீர்த்தி கேரக்டர் பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இப்படத்தில் அவரது கேரக்டருக்கு மேற்கொண்டு வெயிட்டேஜை ஏற்றியிருந்தார் இயக்குநர். ஐஸ்வர்யாவும், தன்னுடைய சூப்பர் நடிப்பை வெளிப்படுத்தி இதிலும் மாஸ் காண்பித்துவிட்டார். அதிலும், விஷ்ணு விஷாலுக்கும், அவருக்கும் வரும் குஸ்தி காட்சியில் கூஸ்பம்ப்ஸ் நிச்சயம்.
பக்கா வசூல்: இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. இதுவரை மொத்தம் 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து படக்குழுவை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. விரைவில் 50 கோடி ரூபாய் வசூலை கடந்து 100 கோடி ரூபாய் வசூலை நெருங்குமா என்ற எதிர்பார்ப்பும் பலரிடம் எழுந்திருக்கிறது. படம் மெகா ஹிட்டாகிவிட்டதால்; சில நாட்களுக்கு முன்பு படக்குழு சார்பில் நன்றி தெரிவிப்பு நிகழ்வும், சக்சஸ் மீட்டும் நடைபெற்றது. அதில் பலரும் கலந்துகொண்டார்கள்.
நோ பரிசு: அந்த விழாவில் ஹீரோ விஷ்ணு விஷாலுக்கு தயாரிபாளர் ஐசரி கணேஷ், பிஎம்டபிள்யூ சொகுசு காரை பரிசாக வழங்கினார். அதேபோல் இயக்குநர்கள் செல்லா அய்யாவுக்கு பத்து சவரனில் செயினும், பிரேஸ்லெடும் அணிவித்தார். சூழல் இப்படி இருக்க; இந்த பரிசு கொடுத்த விவகாரத்தில் புதிய விவாதம் ஒன்று கிளம்பியிருக்கிறது. அதாவது, 'கட்டா குஸ்தி முதல் பாகம், இரண்டாம் பாகத்தில் மெயின் கேரக்டரே ஐஸ்வர்யா லட்சுமிதான்.
தமிழ் சினிமாவில் மொத்த படத்தையும் ஹீரோயின் ஒருவர் தன் தோளில் சுமந்து சென்று வெற்றி பெற வைப்பது அபூர்வமாகத்தான் நடக்கும். அதனை ஐஸ்வர்யா அசால்ட்டாக செய்திருக்கிறார். ஆனால் வெற்றிக்கும், படத்துக்கும் மிக முக்கிய காரணங்களில் ஒருவரான அவருக்கு தயாரிப்பாளர் பெரிய அளவில் பரிசு கொடுக்காமல் சில்வர் காயினோடு நிறுத்திக்கொண்டார். இப்படி செய்வது எந்தவிதத்தில் நியாயம் என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.
More Articles
- கட்டா குஸ்தி 2 வெற்றி.. நம்பவே முடியல.. ஆனந்த கண்ணீர் விடும் ஐஸ்வர்யா லட்சுமி
- Aishwarya Lekshmi: அழகும்.. அறிவும் இருக்குற அற்புதமான நடிகை.. நிஜமாவே சம்பவக்காரி ஐஸ்வர்யா லட்சுமி!
- மீனு டீச்சருடன் அப்படிப் போடும் விஷ்ணு விஷால்.. விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்தும் ஓடும் கட்டா குஸ்தி 2
- கட்டா குஸ்தி 2 ஒரு வரி விமர்சனம் முதல் டீட்டைல் டிஷ்கிரிப்ஷன் வரை.. நெட்டிசனின் ரிப்போர்ட்
- கட்டா குஸ்தி 2 ஓடுமானு கேட்ட விஷ்ணு விஷால்.. எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்காரு போல!
- Gatta Kusthi 2 Review: ’கட்டா குஸ்தி 2’ விமர்சனம்.. புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் நடந்த குஸ்தி எப்படி?