சென்னை: சிம்புவுடன் வாலு படத்தில் நடித்த போது இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், அதன் பின்னர் பிரேக்கப் செய்து பிரிந்து விட்டதாகக் கூறப்பட்டது. நயன்தாராவை தொடர்ந்து ஹன்சிகாவும் சிம்புவை விட்டுப் போய்விட்டாரே என ரசிகர்கள் பலரும் ஃபீல் செய்தனர்.

Advertisement

நடிகை ஹன்சிகா தனது தோழியை விவாகரத்து செய்து பிரிந்த சோஹேல் என்பவரை கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரம்மாண்டமாக திருமணம் செய்துக் கொண்டார். மேலும், டிஸ்னி ஹாட்ஸ்டாரில் அவரது திருமண வீடியோவும் வெளியானது.

Advertisement

Photo Credit:

ஆனால், இருவருக்கும் செட் ஆகாத நிலையில், விவாகரத்து செய்து பிரிந்தனர். கணவர் வீட்டில் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து ஹன்சிகா பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியது.

ரஷ்யாவில் செம ஜாலியாக: ஆனால், டாக்ஸிக் வாழ்க்கையில் இருந்து வெளியேறிய ஹன்சிகா அடிக்கடி வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் அடித்து வருகிறார். நடிகை சமந்தாவும் தன்னை இப்படித்தான் சமாதானப்படுத்திக் கொண்டு அந்த வலியில் இருந்து மீண்டு 2வது திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், தற்போது ரஷ்யாவில் நடிகை ஹன்சிகா உள்ள லேட்டஸ்ட் போட்டோக்களை சற்றுமுன் அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

Advertisement

Photo Credit:

நண்பருடன் துள்ளிக் குதிக்கும் ஹன்சிகா: ஹன்சிகா வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ஒரே ஒரு போட்டோவில் ஆண் நண்பர் ஒருவருடன் துள்ளிக் குதிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ஹன்சிகாவின் ரசிகர்கள் யார் அந்த ஆண் நண்பர் என்கிற கேள்வியை எழுப்பி வருகின்றனர். ஹன்சிகா தனது டீம் உடன் குழந்தைகள் போல தீம் பார்க்கில் விளையாடிய காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

Privet கேப்ஷன்: ஹன்சிகா இந்த போட்டோக்களுடன் வெளியிட்டுள்ள Privet என்கிற கேப்ஷனும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பிரைவேட் போட்டோஸ் என்று சொல்கிறாரா? என்று பார்த்தால் அதுதான் இல்லை. ரஷ்ய மொழியில் Privet என்றால் Hi (ஹாய் அல்லது ஹலோ) என்று அர்த்தம். நடிகை ஹன்சிகாவை 6.8 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்து வருகின்றனர். அமலா பால், சமந்தா போல இவரும் 2வது திருமணம் செய்வாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. ஏகப்பட்ட குழந்தைகளை சிறு வயது முதலே தத்தெடுத்து வளர்த்து வரும் நல்ல மனசுக்கு நல்லாவே இருப்பார் என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.