காற்றின் மொழிக்கு பிறகு… கமர்ஷியலில் இறங்கும் ஜோதிகா


சென்னை: நடிகை ஜோதிகா நடிக்கும் அடுத்த படத்தை எஸ்.ஆர்.பிரபு தயரிக்கிறார்.

36 வயதினிலே திரைப்படம் மூலமாக சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஜோதிகா சிக்சரும் பவுண்டரியுமாக அடித்து வருகிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் ஒருபக்கம் ரிலீஸுக்கு தயாராக இருக்க, ராதாமோகனின் காற்றின் மொழி திரைப்படமும் தயாராக உள்ளது. இந்த நிலையில் அடுத்த பட ஷூட்டிங்கிற்கு தயாராகிவிட்டார் ஜோதிகா.

எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்தை எஸ்.ராஜ் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் திருடன் போலீஸ் மற்றும் பாக்மதி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

கதையை தயார் செய்துவிட்டு இயக்குனர் எஸ்.ராஜ், ஜோதிகாவிடம் கூறியதாகவும், ராஜ் கதை சொன்ன விதத்தையும் கதையையும் வெகுவாக பாராட்டிய ஜோதிகா நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார். முழு ஸ்கிரிப்டும் தயாராகிவிட்டதால் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

சமுதாய அக்கரைக் கொண்ட கமர்ஷியல் படமாக இப்படம் தயாராக உள்ளது. அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

Have a great day!
Read more...

English Summary

Jyotika next movie will be commercial entertainer. Debutant director S.Raj is directing the movie bankrolling by SR.Prabhu.