சென்னை: தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் காஜல் அகர்வால். முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு நடித்த அவர் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்திவரும் காஜல் கடைசியாக; இந்தியன் 2, சிக்கந்தர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அடுத்ததாக தி இந்தியா ஸ்டோரி, ராமாயணா உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.

Advertisement

காஜல் அகர்வால் தமிழில் பழனி படம் மூலம் அறிமுகம் ஆனார். அதனையடுத்து பாரதிராஜா இயக்கத்தில் வெளியான பொம்மலாட்டம் படத்தில் நடித்தார். அவர் ஆரம்பத்தில் நடித்த படங்கள் சரியாக போகாவிட்டாலும் காஜல் அகர்வாலை தமிழ் சினிமா வரவேற்க தயாரானது. தொடர்ந்து தமிழில் மோதி விளையாடு உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தெலுங்கிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

Advertisement

Photo Credit:

மஹதீரா காஜல்: தெலுங்கில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்ததும் ராஜமௌலி இயக்கத்தில் மஹதீரா படத்தில் நடித்தார். ராம்சரண் ஹீரோவாக நடித்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் அந்தப் படம் மாவீரன் என்ற பெயரில் வெளியாகி ஹிட்டாக காஜலை முழுமையாக உபயோகப்படுத்த ஆரம்பித்தது கோலிவுட்.கோலிவுட் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகமான டோலிவுட்டும் காஜலுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது.

முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி: தமிழில் சின்ன சின்ன ஹீரோக்களுடன் நடித்துவந்த அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் ஹீரோயினாக கமிட்டானார். அதில் அவரது நடிப்பும் அழகும் ரசிகர்களை கவர்ந்துவிட சூர்யா, அஜித்,கார்த்தி உள்ளிட்டோருடன் நடிக்க ஆரம்பித்தார். இவற்றில் அஜித்துடன் நடித்த விவேகம் படம் படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி க்ளைமேக்ஸ் காட்சியில் அவரது நடிப்பை வைத்து சிலர் ட்ரோலும் செய்தனர்.

Advertisement

திருமணம் செய்துகொண்ட காஜல்: இந்தச் சூழலில் அவர் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துகொண்ட காஜல் ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளார். அவருடன் நேரம் செலவழித்துவந்த காஜல் அக்ரவால் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து கடைசியாக இந்தியன் 2, சிக்கந்தர் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அடுத்ததாக ராமாயணா படத்திலும் நடித்திருக்கிறார்.

காஜல் பேட்டி: இந்நிலையில் அவரது சமீபத்திய பேட்டியில், "ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தேன் அந்த இடைவேளையில் கேரவனில் இருந்தேன். முதல் டேக் முடிந்ததும், அப்படத்தின் உதவி இயக்குநர் ஒருவர் எந்த அனுமதியும் இல்லாமல், கதவையும் தட்டாமல் உள்ளே நுழைந்தார். உள்ளே வந்த அவர் நான் தனியாக இருப்பதை பார்த்து தவறாக நடந்துகொள்ள தொடங்கினார்.

Advertisement

சட்டையை கழற்றி: அவர் தன்னுடைய சட்டையை கழற்றிவிட்டு டாட்டூட்வை காட்டினார். அதில் என்னுடைய பெயர்தான் இருந்தது. இருப்பினும் அவருடைய செயல் காரணமாக ஒருகணம் அதிர்ந்துவிட்டேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை; கை, கால்கள் எல்லாம் நடுங்கிவிட்டேன். ரசிகர் என்ற பெயரில் இப்படி செய்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது" என தெரிவித்திருக்கிறார்.