சென்னை: டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கயாடு லோஹர்; அடுத்ததாக ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக இம்மார்ட்டல் படத்தில் நடித்திருக்கிறார். செப்டம்பர் நான்காம் தேதி படம் ரிலீஸாகவிருக்கும் சூழலில்; இன்று படத்திலிருந்து இரண்டாவது சிங்கிளின் லிரிக்கல் வீடியோ வெளியாகியிருக்கிறது. அதில் கயாடு அனைவரையும் ஈர்த்திருக்கிறார்.

Advertisement

கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துக்கொண்டிருந்தவர் கயாடு லோஹர். தமிழில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து அஷ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படத்தில் கொஞ்ச நேரமே வந்திருந்தாலும் தன்னுடைய அழகின் காரணமாக அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிட்டார். திருமண வரவேற்பு காட்சியில் கறுப்பு உடையில் அவர் போட்ட நடனமும் அப்போதைக்கு பயங்கரமாக ட்ரெண்டாகின.

Advertisement

Photo Credit:

இதயம் முரளியில் ஸ்மார்ட்: டிராகன் படத்துக்கு பிறகு ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் இதயம் முரளி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இன்னொரு ஹீரோயினாக ப்ரீத்தி முகுந்தனும் நடித்திருந்தார். படத்தில் மற்றொருவர் இருந்தாலும் தனக்கான ஸ்பேஸை சரியாக எடுத்துக்கொண்ட கயாடு; பக்குவமான நடிப்பை டெலிவர் செய்திருந்தார். அது அனைவரிடமும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாரி செல்வராஜ் கூட்டணியில்: தமிழில் கயாடுதான் இப்போது டிமாண்ட் அதிகரித்திருக்கும் ஹீரோயினாக இருக்கிறார். மாரி செல்வராஜும் தன்னுடைய மஞ்சணத்தி திரைப்படத்தில் கயாடுவைத்தான் கமிட் செய்திருக்கிறார். அந்தப் படம் அவருக்கு அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்வதற்கான பாதையை அமைத்து கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதற்கிடையே கயாடுவை சுற்றி ஒரு சர்ச்சையும் எழுந்திருந்தது.

Advertisement

என்ன சர்ச்சை?: அதாவது கயாடு லோஹர் ஒரு பார்ட்டியில் பங்கேற்க 35 லட்சம் ரூபாய் சார்ஜ் செய்கிறார் என கிளப்பிவிட்டார்கள். அது அவரை ரொம்பவே பாதித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு பேட்டியில்கூட அதுகுறித்து மன வேதனையுடன் அவர் பேசியிருந்தது கவனிக்கத்தக்கது. அந்தத் தகவலில் துளிக்கூட உண்மையில்லை என்பது உறுதியானாலும்; நிச்சயம் கயாடுவை ரொம்பவே அந்த விஷயம் டிஸ்டர்ப் செய்திருந்ததை மட்டும் உணர்ந்துகொள்ள முடிந்தது.

ஜிவி பிரகாஷுடன்: தற்போது அவர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக இம்மார்ட்டல் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தை மாரியப்பன் சின்னா என்பவர் இயக்க; சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். முதலில் இந்த மாதம்தான் படம் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸாகிவிட்டதால்; இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. செப்டம்பர் நான்காம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது.

Advertisement

இரண்டாவது சிங்கிள்: இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஷீ இஸ் மை என்ற இரண்டாவது பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகியிருக்கிறது. அதில் கயாடு பார்வையாலும், நடையாலும் ஜிவி பிரகாஷை சொக்கிப்போக வைத்திருக்கிறார். அவரை மட்டுமில்லை ரசிகர்களையும்தான். ஓவர் கிளாமர் காட்டாமல் அனைவரையும் தன்னால் கிறங்கடிக்க முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை இதில் அவர் நிரூபித்திருக்கிறார்.