சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டவர் நயன்தாரா. அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். வாடகை தாய் மூலம் அந்த குழந்தைகளை அவர்கள் பெற்றார்கள். இப்போதும் பிஸியாக நடித்துவரும் நயன்; தன் குழந்தைகளுடன் தவறாமல் நேரம் செலவழித்துவருகிறார். இந்நிலையில் அவரது வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார் நயன்தாரா. சில வருடங்கள் அவர்கள் இரண்டு பேரும் லிவிங் டூ கெதரில் இருந்தார்கள். அதற்கு பிறகு சில வருடங்களுக்கு முன்பு திருமணமும் செய்துகொண்டார்கள். திருமணம் செய்த கையோடு உயிர், உலக் என இரண்டு மகன்களை பெற்றார்கள். அது பெரிய அளவில் சர்ச்சையானது. அதனையடுத்து கடந்த திமுக அரசில் விசாரணை நடத்தப்பட்டு எந்த விதிமீறலும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே; பிரச்னை ஓய்ந்தது.
இப்போதும் பிஸி: திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றதால்; சினிமாவிலிருந்து அவர் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கிவிடுவார் என்றே கணிக்கப்பட்டது. ஆனால் முன்னைவிட வேகமாக உழைக்கிறார் நயன். அவரது நடிப்பில் அடுத்ததாக ராக்காயி, மண்ணாங்கட்டி, டாக்சிக், மூக்குத்தி அம்மன் 2, ஹாய், சல்மான் கானுக்கு ஜோடியாக ஒரு ஹிந்தி படம் என பல படங்களை கையில் வைத்திருக்கிறார். கண்டிப்பாக அந்தப் படங்கள் அவரது மார்க்கெட்டை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தைகள்தான் உலகம்: நயனுக்கு இப்போது அவருடைய இரண்டு மகன்கள்தான் ஒட்டுமொத்த உலகமும். ஷூட்டிங்கை முடித்துவிட்டு நேராக வீட்டுக்கு செல்லும் அவர்; தன் மகன்களுக்கு பொறுப்பான தாயாக இருக்கிறார். ஒரு பக்கம் சினிமா இன்னொரு பக்கம் குடும்பத்தை எந்த குழப்பமும், பிரச்னையும் இல்லாமல் அவர் மேனேஜ் செய்யும் விதம் பெரிய பாராட்டை பெற்றிருக்கிறார். ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலாவும் சென்றுவருகிறார்.
விக்கியின் கரியர்: விக்னேஷ் சிவனும் அடுத்து படம் இயக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார். கடைசியாக அவர் பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்ஐகே திரைப்படத்தை இயக்கியிருந்தார். அது மோசமான தோல்வியை சந்தித்தது. திட்டமிட்டே தன்னுடைய படத்தை ஓடவிடாமல் செய்துவிட்டார்கள் என்றும் விக்கி புலம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் கடைசியாக ஹிட் கொடுத்தது நானும் ரௌடிதான் படத்தில்தான். எனவே ஒரு வெற்றியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என முழு முனைப்பில் இருக்கிறார்.
ஆடி வெள்ளியில் நயன்: இந்நிலையில் நயன்தாரா தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது இன்று ஆடி வெள்ளியாகும். எனவே விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தங்கள் குழந்தைகளுடன் காளி அம்மன் கோயிலுக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்தார்கள். அப்போது இரண்டு மகன்களும் க்யூட்டாக தாயிடமும், தந்தையிடமும் இருந்தபடி சாமி கும்பிட்டுவிட்டு வந்தார்கள். அங்கே இருந்த சிலருடனும் விக்கியும், நயனும், செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்கள்.
More Articles
- கருப்பு பார்த்துவிட்டு நயன்தாரா செய்த விமர்சனம்.. ஆர்.ஜே. பாலாஜி ஓபன்..மேடம் சூப்பரா சொன்னாங்களாம்
- கியாரா அத்வானியோட புகுந்து விளையாடுறாரு யஷ்.. நயன்தாராவோட லுக் தான் செம.. டாக்ஸிக் பாட்டு செம!
- லேடீஸ்.. லேடீஸ்.. நயன்தாரா, கியாரா, ருக்மணி, ஹூமா குரேஷின்னு யஷ்ஷுக்கு செம டஃப் கொடுக்கிறாங்களே!
- கண்ணீர் வெள்ளத்தில் பூர்ணிமா பாக்யராஜ்.. முத்தம் கொடுத்து ஆறுதல் சொன்ன நயன்தாரா.. சாந்தனுவை தேற்றிய விக்கி!
- கமல்ஹாசனின் பேர் சொல்லும் பிள்ளையாக கவின்.. அடடே எல்லாம் சிறப்பாக தொடங்கிடுச்சே
- மூக்குத்தி அம்மனில் கடவுள்.. காஞ்சனா 4ல் பேயா?.. ஆச்சரியப்படுத்தும் நயன்தாராவின் மூவ்