சென்னை: மலையாளத்தில் மம்மூட்டிக்கே ரோர்ஷா படத்தில் விரலை விட்டு ஆட்டும் அளவுக்கு நடித்து ஒட்டுமொத்த கேரள ரசிகர்களை மட்டுமின்றி தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தையே கவர்ந்தவர் தான் கிரேஸ் ஆண்டனி.

Advertisement

ஹேப்பி வெட்டிங் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான கிரேஸ் ஆண்டனி கும்பலாங்கி நைட்ஸ் படத்தின் மூலமே மலையாள ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக மாறினார்.

Advertisement

Photo Credit:

இயக்குநர் ராம் இயக்கத்தில் சிவா, அஞ்சலி நடித்த 'பறந்து போ' படத்தில் மலையேற முடியாமல் கஷ்டப்படும் அம்மாவாக நடித்த கிரேஸ் ஆண்டனி தற்போது தனது உடல் எடையை குறைத்து எந்த மலை ஏறணும்னு சொல்லுங்க ஓடி வந்து ஏறுகிறேன் என்கிற அளவுக்கு ஆளே மாறிவிட்டார்.

80 கிலோவில் இருந்து 60 கிலோ: எவ்ளொ பெரிய சினிமா பிரபலமாக இருந்தாலும், நேச்சுரல் முடி இல்லை என்றாலோ, அதிக எடை போட்டாலோ, உயரமாக இல்லையென்றாலோ சமூக வலைதளங்களில் பலரும் பாடி ஷேமிங் கிண்டல் தான் செய்வார்கள். சினிமா வட்டாரத்தில் பருமனாக இருக்கும் நடிகைகளுக்கு வாய்ப்புகளே குறைந்து போய் விடும். அனுஷ்கா போன்ற நடிகைகள் சினிமாவுக்காக தங்களது உடலை கெடுத்துக் கொண்டு குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதையும் பார்த்துள்ளோம். இந்நிலையில், 29 வயதே ஆன கிரேஸ் ஆண்டனி 80 கிலோ எடையை 60 கிலோவாக குறைத்து அசத்தியுள்ளார்.

Advertisement

Photo Credit:

பருமனை குறைத்த பறந்து போ நடிகை: மலையாளத்தில் அடுத்த ஊர்வசி என சொல்லும் அளவுக்கு தனது நடிப்பால் அசத்தி வரும் கிரேஸ் ஆண்டனி தமிழில் பறந்து போ என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டும் இதுவரை நடித்துள்ளார். இந்த ஆண்டு மம்மூட்டி, மோகன்லால் நடித்து வெளியான பேட்ரியாட் படத்திலும் இவர் நடித்திருந்தார். கடந்த ஆண்டு அபி டாம் சிரியாக் என்பவரை திருமணம் செய்த நிலையில், திருமணத்துக்குப் பிறகு சீராக தனது உடல் எடையை அதிரடியாக குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

நெவர் ஸ்டாப் டிரையிங்: தனது பழைய பருமனாக உள்ள போட்டோவையும் தற்போது ஸ்லிம்மாக மாறியுள்ள போட்டோவையும் கம்பேர் செய்து போட்டு Never Stop Trying என கேப்ஷன் கொடுத்துள்ளார் நடிகை கிரேஸ் ஆண்டனி. யாராக இருந்தாலும், தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் கிரேஸ் ஆண்டனியின் இந்த டிரான்ஸ்ஃபர்மேஷன் பலருக்கும் ஊக்கத்தை அளிக்கும் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.