சென்னை: தனுஷின் நடிப்பில் அடுத்ததாக ஓம் திரைப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. அதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். மம்மூட்டி, சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இதனை முடித்துவிட்டு தமிழரசன் பச்சமுத்து இயக்கத்திலும், மாரி செல்வராஜ் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் உள்ளிட்ட பல முகங்களை கொண்டிருப்பவர் தனுஷ். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கர திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. விக்னேஷ் ராஜா கண்டிப்பாக ஹிட் கொடுத்துவிடுவார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் சொதப்பி வைத்தது தனுஷின் ரசிகர்களை ரொம்பவே கடுப்பேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
அடுத்த படம்: கர படத்தை முடித்துவிட்டு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் மெகா ஸ்டார் மம்மூட்டி, சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். அக்டோபர் மாதம் படம் ரிலீஸாகவிருக்கிறது. சமீபத்தில்தான் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. 15ஆம் தேதி ஜெயிலர் 2 வெளியாகிறது. எனவே அதற்கு போட்டி போட்டு ஓம் தப்பிக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
என்ன கதை?: படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வீடியோவாக வந்தது. அந்த வீடியோவை பார்க்கும்போது, 'செம்மரம் கடத்தியதாக கொல்லப்பட்ட தமிழர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்குமோ என தோன்றுகிறது. இதற்கு முன்னர் ராஜ்குமார் இயக்கிய அமரன் திரைப்படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான். அந்தப் படம் மெகா ஹிட்டானது. எனவே அந்த் சென்ட்டிமென்ட் படி இந்தப் படமும் ஹிட்டாகுமா என்ற ஆவலும் எழுந்துள்ளது.
லப்பர் பந்து இயக்குநருடன்: இதற்கிடையே லப்பர் பந்து படத்தை இயக்கி கவனம் ஈர்த்த தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் தனுஷ். இந்தப் படத்தின் மீதும் அபார நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது. ஓம் படத்தின் ரிலீஸுக்கு பிறகுதான் இந்தப் படத்தின் அப்டேட்டுகள் எல்லாம் வரும் என்று இயக்குநர் சில நாட்களுக்கு முன்புதான் திட்ட்வட்டமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் ஹீரோயின்?: இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கும் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, தற்போது சென்சேஷனலாக இருக்கும் ப்ரீத்தி முகுந்தன்; தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறாராம். சமிபத்தில்தான் அவர் அதற்கு ஓகே சொல்லிவிட்டார் என்று தெரிகிறது. இதற்கு முன்னதாக அவர் இதயம் முரளி, பிளாஸ்ட் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அவற்றில் பிளாஸ்ட் திரைப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் எல்லாம் கலக்கியிருந்தார். படமும் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
More Articles
- என் சக்திக்கு அவ்வளவுதான் முடியும்.. தனுஷ் படம் பற்றி இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து ஓபன்
- திரிவிக்ரமை அடிச்சு ஓடவிடுறோம்.. தனுஷ் படத்துக்கு என்னமா ஆதரவு குவியுது.. ஷூட்டிங் எப்போ ஸ்டார்ட் பண்றீங்க?
- LOL Box Office: தனுஷ் மருமகன் 2வது படம் என்ன ஆச்சு?.. லவ் ஓ லவ் முதல் நாள் வசூல் இத்தனை லட்சம் தானா?
- சபாஷ் சரியான போட்டி.. யாருக்கு தனுஷ் vs ஜூனியர் என்டிஆருக்கா?.. இல்லை Ai vs Ai.. முடியல முருகா!
- THAMIZH MURUGAN: தனுஷ் & வெற்றி மாறன் கூட்டணியில் தமிழ் முருகன்.. பதிலடி கொடுக்க படமே எடுக்கறாங்கப்பா
- தனுஷ் ரசிகர் மன்ற கொடி.. விஜய் பாணியில் அரசியலா? சோசியல் மீடியாவில் வெடித்த அரசியல் விவாதம்!