சென்னை: சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவர் ரச்சிதா மகாலட்சுமி. சீரியல்களில் குடும்பப் பெண்ணாக தோன்றி ரசிகர்களின் மனதை கவர்ந்த ரச்சிதா, இப்போது சமூக வலைதளங்களிலும் அதே வேகத்தில் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார். படப்பிடிப்பு பிஸி ஒருபக்கம் இருந்தாலும், அவ்வப்போது கலக்கலான போட்டோஷூட்களை வெளியிட்டு இணையத்தை சூடேற்றுவது இவரது வழக்கம்.

Advertisement

இந்த முறை அவர் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை மொத்தமாக திருப்பியிருக்கின்றன. விலையுயர்ந்த காஸ்ட்யூம் இல்லை... மாடர்ன் கிளாமர் இல்லை... சிம்பிளான காட்டன் சேலை, நீளமான கூந்தல், மெலிதான மேக்கப்... அவ்வளவுதான். ஆனாலும் அந்த சிம்பிள் லுக்கே ரசிகர்களை மயக்கிப் போட்டிருக்கிறது.

Advertisement

பர்ப்பிள் கலரில் காட்டன் சேலை அணிந்து, இயற்கை வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒவ்வொரு போஸும் தனி அழகை வெளிப்படுத்துகிறது. ஒரு போட்டோவில் சூரிய ஒளியை ரசித்தபடி கண்களை மூடி சிரிக்கிறார். இன்னொரு புகைப்படத்தில் நீளமான கூந்தலை சரிசெய்தபடி தேவதை போல போஸ் கொடுத்திருக்கிறார். சில படங்களில் கேமராவை நேராக பார்த்து சிரிப்பதோ, சிலவற்றில் இயல்பான சிரிப்போ... எல்லாமே ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

இந்த புகைப்படங்களுக்கு கீழே ரசிகர்களின் கமெண்ட்ஸும் செம வைரலாகி வருகிறது. "தேவதை மாதிரி இருக்கீங்க", "காட்டன் சேலையிலேயே இவ்வளவு அழகா?", "நேச்சுரல் பியூட்டி", "சிம்பிள் தான்... ஆனா செம்ம கிளாஸ்", "எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கலை" என்று ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனையே நிரப்பி வருகின்றனர். சிலர் வழக்கம்போல ஹார்ட் எமோஜிகளையும், ஃபயர் எமோஜிகளையும் குவித்து ஜொள்ளு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement

ரச்சிதா மகாலட்சுமி என்றாலே சின்னத்திரை ரசிகர்களுக்கு முதலில் ஞாபகம் வருவது 'சரவணன் மீனாட்சி'. அந்த சீரியல் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்தது. அதன்பிறகு பல முன்னணி சீரியல்களில் நடித்ததுடன், ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டு தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

ரசிகர்கள் வரவேற்பு: அதோடு மட்டும் நின்றுவிடாமல், வெள்ளித்திரையிலும் கவனம் செலுத்தி வருகிறார். சீரியல், ரியாலிட்டி ஷோ, திரைப்படம் என பிஸியாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் தொடர்ந்து கனெக்ட்டாக இருப்பது ரச்சிதாவின் ஸ்டைல். அதனால்தான் அவர் போடும் ஒவ்வொரு போட்டோவும், ரீலும் சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளையும் ஷேர்களையும் அள்ளி வருகிறது.

Advertisement

சிம்பிள் தி பெஸ்ட்: கிளாமர் போட்டோஷூட்களால் இணையத்தை கலக்குவது ஒரு ட்ரெண்ட் ஆகிவிட்ட இந்த காலத்தில், வெறும் காட்டன் சேலையிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, "சிம்பிள் இஸ் தி பெஸ்ட்" என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் ரச்சிதா மகாலட்சுமி. அதனால்தான் ரசிகர்கள், "தேவதை கணக்கா இருக்கீங்கப்பா... இன்னும் இப்படியே போட்டோஸ் போடுங்க!" என்று அன்போடு கமெண்ட் செய்து வருகிறார்கள்.