முடியல ராக்கி முடியல: ரசிகர்கள் விட்டா அழுதுடுவாங்க பாவம்


மும்பை: நடிகை ராக்கி சாவந்த் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடியுள்ளார். கடந்த ஆண்டு சிவப்பு நிற பட்டுப்புடவை அணிந்து தலை நிறைய பூ வைத்து ரசிகர்களை லைட்டா பயப்பட வைத்தார்.

இந்த ஆண்டோ வெள்ளை நிற உடை அணிந்து மறுபடியும் தலை நிறைய பூ வைத்து 4 லேயர் மேக்கப் போட்டு புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

புகைப்படங்களில் அவர் அழகாக இருக்கிறார் என்று சிலர் கூறினாலும், பொய் சொல்ல மனம் இல்லை, கொஞ்சம் பயமாகத் தான் உள்ளது என்கின்றனர் பலர். அதிலும் முகத்தை மட்டும் குளோசப்பில் செல்ஃபி எடுத்துள்ளதை பார்த்தால் நிஜமாகவே ரசிகர்கள் மம்மி பயமாக இருக்கு என்று தான் கூறுகிறார்கள்.

விளம்பரம் தேட ராக்கி சாவந்த் அவ்வப்போது ஏதாவது செய்வார் என்பதால் இந்த புகைப்படங்களையும் அவர் வேண்டும் என்றே போட்டிருப்பார் என்கிறார்கள் பாலிவுட்காரர்கள்.

Have a great day!
Read more...

English Summary

Bollywood actress Rakhi Sawant celebrated Vinayagar Chathurthi and posted pictures on instagram.