சென்னை: செம்பருத்தி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ரோஜா; 90களில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர். ரஜினிகாந்த், கார்த்திக், அஜித்குமார் உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்து வெற்றி படங்களில் நடித்த அவர்; தெலுங்கிலும் பிஸியான ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தார். அரசியலுக்கு சென்றிருந்த அவர்; இப்போது ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்நிலையில் அவர் தன் மகனின் திருமணம் குறித்து பேசியிருக்கிறார்.
ஆர்.கே.செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் ரோஜா. அந்தப் படத்துக்கு பிறகு சூரியன், உழைப்பாளி, வீரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக மாறினார். தமிழில் எப்படி பிஸியாக இருந்தாரோ அதேபோல் தெலுங்கிலும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே முதல் படத்தில் நடித்தபோதிருந்தே இயக்குநர் செல்வமணியுடன் காதல் பிறந்தது. இரண்டு பேரும் பத்து வருடங்கள் வரை காதலித்து பிறகு திருமணம் செய்துகொண்டார்கள்.
ரோஜாவின் குடும்பம்: அந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். மகள் சமீபத்தில்தான் அமெரிக்காவில் இருக்கும் இண்டியானா பல்கலைக்கழகத்தில் கொடுக்கப்படும் உயரிய விருதான ஹெர்மன் பி வெல்ஸ் விருதை பெற்று பெருமை சேர்த்தார். அவரது மகனும் இப்போது கல்லூரி படிப்பில் இருப்பதாக தெரிகிறது. இவர்களில் யாராவது ஒரு ஆள் சினிமாவுக்கு வருவார்களா? அல்லது வரவே மாட்டார்களா? இல்லை இரண்டு பேருமே தங்களது பெற்றோர் மாதிரி திரைத்துறைக்குள் என்ட்ரி தருவார்களா என்பது காலம் செல்ல செல்ல தெரியும்.
ரீ என்ட்ரி கொடுத்த ரோஜா: சினிமாவில் மட்டுமின்றி அரசியலுக்கு சென்று அங்கேயும் தன் முத்திரையை பதித்த ரோஜா; இப்போது ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். அந்தவகையில் கடைசியாக அவரது நடிப்பில் அன்பே டயானா திரைப்படம் வெளியானது.இதில் பாரி இளவழகனுக்கு அம்மாவாக தெலுங்கு பேசும் கேரக்டரில் நடித்து பட்டையை கிளப்பியிருந்தார். அவரது நடிப்புக்கென்று தியேட்டரி அப்ளாஸ்கள் நிறையவே விழுந்தன.
எழும் கோரிக்கைகள்: நீண்ட வருடங்கள் கழித்து ரோஜாவின் நடிப்பை பார்த்த ரசிகர்களோ; இனிமேலும் சினிமாவிலிருந்து ஒதுங்காமல் இதுமாதிரியான கேரக்டர்களை அவர் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்திருக்கின்றன. அடுத்ததாக, லெனின் பாண்டியன் என்ற படத்திலும் நடித்திருகிறார். அதில் அவருடன் கங்கை அமரனும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். இந்நிலையில் அன்பே டயானா ரிலீஸுக்கு பிறகு ரோஜா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
ரோஜாவின் பேட்டி: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "அன்பே டயானா படத்தில் தாலி எங்கே? பாத்ரூமில் இருக்கு எடுத்துட்டு வா என பாரியை பார்த்து ஹீரோயின் சொல்வார். உடனே அவர் எங்கள் இரண்டு பேருக்கும் இடையே நின்று விழித்துக்கொண்டிருப்பார். என் மகனுக்கு திருமணம் நடக்கும்போது எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. இப்போதைக்கு அவன் ரொம்ப சின்னவன்.
ரொம்ப அரிது: சமீபத்தில்தான் அவன் 20வது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் பார்க்கத்தான் டீன் ஏஜ். ஆனால் இன்னும் சின்ன குழந்தை மாதிரிதான் இருக்கிறார். என் மகன், மகள் இரண்டு பேருக்கும் எதுவும் தெரியாது. அப்பா, அம்மா என்ன சொல்கிறார்களோ அதைத்தான் கேட்பார்கள். இந்த காலத்தில் அந்த மாதிரி பிள்ளைகளை பார்ப்பது அரிதுதான்" என்றார்.
More Articles
- Anbe Diana Box Office: முதல் நாளில் செல்ஃப் எடுக்காத அன்பே டயானா.. இத்தனை பிரச்னைகளா?
- கழுத்தை ஒட்டிய பிளவுஸ்.. ரத்தம் கொட்டியது.. 'கருகரு கருப்பாகி' பாட்டின் வலியை சொன்ன நடிகை ரோஜா!
- அமைதியா இருந்த விஜய் பிச்சி உதறுறார்.. அவர் முதலமைச்சரானது எனக்கு ஆச்சரியம்.. ரோஜா பேட்டி!
- Anbe DIana Review: அன்பே டயானா விமர்சனம்.. காதலுக்கு சாதி, மதம் எதுவும் தடையில்லை.. தைரியமா சொல்லுங்க!
- Anbe Diana: அன்பே டயானாவை ரசித்து ரசித்து விமர்சனம் செய்த நெட்டிசன்.. அடேங்கப்பா படம் ஹிட்டுடோய்
- மகள் வாங்கிய உயரிய விருது.. ஆஸ்கர் மாதிரியாம்.. பெருமை பொங்க மனம் திறந்த ரோஜா