சென்னை: நடிகை சாய் பல்லவி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பிஸியாக நடித்துவருகிறார். பாலிவுட்டில் அவர் நடித்துவரும் ராமாயணம் திரைப்படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிவருகிறது. தமிழில் தனுஷுக்கு ஜோடியாக ஓம் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். அந்தப் படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் முத்த காட்சியில் நடிப்பது குறித்து அதிரடி கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

Advertisement

தமிழ்நாட்டை சேர்ந்த சாய் பல்லவி மலையாளத்தில் நடிப்பு பயணத்தை ஆரம்பித்தார். முதல் படமான பிரேமம் மெகா ப்ளாக் பஸ்டர் அடித்து அவருக்கான டிமாண்டை அதிகரித்தது. தொடர்ந்து அங்கே நடித்துவந்த பல்லவி; தமிழில் மாரி 2 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படம் தோல்வியடைந்தாலும் தனது பவர்ஃபுல்லான ஃபெர்பார்மையும், நடனத்தையும் அதில் வெளிப்படுத்தியிருந்தார். அதனையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடித்திருந்தார். அதுவும் சொல்லிக்கொள்ளும்படியான வரவேற்பை பெறவில்லை.

Advertisement

Photo Credit:

மெகா ஹிட்டான அமரன்: அப்படிப்பட்ட சூழலில் கார்கி திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டாகி அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இருப்பினும் அவர் எதிர்பார்த்தது மிகப்பெரிய வெற்றியை மட்டும்தான். அந்த வெற்றி அமரன் திரைப்படத்தில் கிடைத்தது. அதிலும், சாய் பல்லவி இல்லையென்றால் அந்தப் படம் கண்டிப்பாக இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்காது என்றும் பலர் சொன்னது நினைவுகூரத்தக்கது.

பாலிவுட்டில் பல்லவி: மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளை தொடர்ந்து தற்போது பாலிவுட்டுக்கும் சென்றிருக்கிறார். முதலில் அவர் ராமாயணம் படத்தில்தான் அறிமுகம் ஆனார். ஆனால் அது ரிலீஸாக தாமதமாகியிருக்கிறது. அதற்கு முன்னதாகவே ஏக் தின் என்ற படம் மே ஒன்றாம் தேதி ரிலீஸானது. ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. கண்டிப்பாக ராமாயணம் திரைப்படம் அவருக்கு பாலிவுட்டில் மார்க்கெட்டை உயர்த்தும் எனவும் கருதப்படுகிறது.

Advertisement

கிளாமருக்கு நோதான்: அவரது இன்னொரு ஸ்பெஷலாக பார்க்கப்படுவது நோ கிளாமர் பாலிஸி. எவ்வளவுதான் கொட்டி கொடுத்தாலும் தான் கிளாமராக நடிக்கமாட்டேன் என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறார் அவர். அதை பார்த்து பலரும் ஆச்சரியம்தான் படுகிறார்கள். அதுமட்டுமின்றி அவரது அந்த குணமும் அவருக்கான ரசிகர்களையும், ரசிகைகளையும் உயர்த்தி கொடுத்ததையும் கவனிக்க வேண்டும். அதேசமயம் பாலிவுட்டுக்கு இப்போது அவர் சென்றிருப்பதால்; அங்கே இந்த பாலிஸியெல்லாம் எடுபடாது என்ற கருத்தும் எழுந்தது.

அதிரடியாக சொன்ன பல்லவி: இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அதிரடியான கருத்தை வெளியிட்டிருக்கிறார் சாய் பல்லவி. அந்தப் பேட்டியில் அவர், "எனக்கு ஒரு காதலர் இருந்தால்; அவர் நடிப்பதிலோ அல்லது வேறு எந்த காரணத்துக்காகவோ வேறு ஒருவரை முத்தமிடக்கூடாது என்றுதான் நினைப்பேன். ஒரு ஆணோ, பெண்ணோ நல்ல குடும்பம், கார், வாழ ஒரு வீடு இருந்தாலே போதும். நல்ல வாழ்க்கை வாழ்ந்துவிடலாம். அதெல்லாம் எனக்கு ஏற்கனவே இருக்கின்றன.

Advertisement

முத்தம் கொடுக்க முடியாது: கூடுதலாக இன்னொரு கார் வாங்க வேண்டும் என்பதற்காக இன்னொருவரை முத்தமிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இப்போது இருக்கும் வாழ்க்கையிலேயே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் ஒரு படத்தில் இருக்க வேண்டும் என அவர்கள் விரும்பினால் நான் நடிக்கிறேன். ஆனால் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டுமென்றால் வேறு ஒருவரை தேர்வு செய்துகொள்ள சொல்வேன். அதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை" என்றார்.