சென்னை: ஒரு காலத்தில் "கட்டிப்புடி கட்டிப்புடிடா' என கவர்ச்சி டான்ஸ் போட்ட மும்தாஜ், "வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள" என சிம்புவடன் ஆடிய சனா கான் எல்லாம் கிளாமர் ஹீரோயின்களாக இருந்து இப்போ இறை மார்க்கத்தை கடைபிடிக்கும் பெண்களாக மாறியுள்ளனர். அவர்கள் வரிசையில் சஞ்சிதா ஷெட்டியும் பக்தி மயமாக மாறியுள்ளார்.

Advertisement

வில்லன் நடிகரான நம்பியார் தான் மிகப்பெரிய குருசாமியாக இருந்தார் என்பது பலருக்கும் தெரியும் ஏகப்பட்ட வில்லன் நடிகர்கள் எல்லாம் பக்தி மயமாகவும் கோயில்களை கட்டியும் இறை நம்பிக்கையில் ஈடுபாடு கொண்டுள்ளனர்.

Advertisement

Photo Credit:

சூது கவ்வும், பல்லு படாம பாத்துக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சஞ்சிதா ஷெட்டி ஏற்கனவே கிரிவலம் எல்லாம் சென்று தனது பக்தியை வெளிப்படுத்திய நிலையில், சமீப காலமாக தொடர்ந்து சாமியார்களை சந்தித்து வருகிறார்.

யாரு இந்த சஞ்சிதா ஷெட்டி: தில்லாலங்கடி படத்தில் தமன்னாவின் தங்கையாக நடித்து ரசிகர்களை அப்போதே கவர்ந்தவர் தான் நடிகை சஞ்சிதா ஷெட்டி. விஜய் சேதுபதி ஜோடியாக சூது கவ்வும் படத்தில் நடித்து வேறலெவலில் பிரபலமானார். பிட்சா 2, என்னோடு விளையாடு, ரம், எங்கிட்ட மோதாதே, வினோதய சித்தம், பஹீரா, பல்லு படாம பாத்துக்கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

பக்தி மயமான சஞ்சிதா ஷெட்டி: கவர்ச்சியாக படங்களில் நடித்து வந்த நடிகை சஞ்சிதா ஷெட்டி சமீப காலமாக பயபக்தியாக மாறியுள்ளார். திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது, சாமியார்களை சந்திப்பதாக போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் எப்போதுமே ஹோம்லி லுக்கில் சுடிதார் மற்றும் சேலை அணிந்தே போட்டோக்களை போட்டு வருகிறார்.

குடும்பத்துடன் சாமியாரை சந்தித்த சஞ்சிதா: 37 வயதாகும் சஞ்சிதா ஷெட்டி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருதேவரை கடந்த மே மாதம் பார்த்து விட்டு வந்தார். இந்நிலையில், தற்போது தனது குடும்பத்தினருடன் ஸ்ரீ ராஜேந்திர தாஸ் மகராஜை சந்தித்து ஆசி பெற்ற போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். சாமியாரை சஞ்சிதா ஷெட்டி தனது குடும்பத்தினருடன் சந்தித்த நிலையில், ஏகப்பட்ட லைக்குகள் மற்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.