சென்னை: கிளாமர் வொர்க்அவுட் வீடியோக்களால் சோஷியல் மீடியாவை எப்போதும் சூடேற்றி வைக்கும் நடிகை ஷாலு ஷம்மு, தற்போது டிரடிஷனல் பிங்க் அண்ட் டீல் புளூ புடவையில் பளபளக்கும் ஆபரணங்களுடன் வெளியிட்டுள்ள போட்டோஷூட் இணையத்தில் அனல் பறந்து வருகிறது!
நடிகை ஷாலு ஷம்மு: தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன், சூரி கூட்டணியில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் நாயகி ஸ்ரீதிவ்யாவின் தோழியாக நடித்துப் பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. அதனைத் தொடர்ந்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷின் ஜோடியாகவும், இருட்டு அறையில் முரட்டுக்குத்து, திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல முன்னணித் திரைப்படங்களில் சிறிய ஆனால் ரசிகர்கள் மனதில் பதியும் கதாபாத்திரங்களில் நடித்துத் தனக்கென இடம் பிடித்தார்.
சோஷியல் மீடியா ராணி: பெரிய திரையில் பட வாய்ப்புகள் குறைந்த போதிலும், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ் போன்ற டிஜிட்டல் தளங்களில் ஷாலு ஷம்முவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே செல்கிறது. குறிப்பாகத் தீவிரமான ஜிம் வொர்க்அவுட் வீடியோக்கள், கிளாமர் நடன ரீல்ஸ்கள் மற்றும் அல்ட்ரா மாடன் போட்டோஷூட்களைப் பகிர்ந்து ரசிகர் பட்டாளத்தை எப்போதும் கைகுள்ளேயே வைத்துள்ளார்.
லேட்டஸ்ட் லுக்: எப்போதும் கிளாமர் உடைகளில் வலம் வரும் நடிகை ஷாலு ஷம்மு, தற்போது அதற்கு முற்றிலும் மாறாக அசல் தமிழ் பெண் போலப் பிங்க் மற்றும் மயில்நீல நிறக் கலவை கொண்ட பட்டுப் புடவையில், கிராண்டான ஆரம் மற்றும் வளையல்கள் அணிந்து கொள்ளை அழகில் காட்சியளிக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். புன்னகை பூத்த முகத்துடன் அவர் கொடுத்துள்ள இந்த ட்ரடிஷனல் போஸ்களைப் பார்த்த ரசிகர்கள், அடடே... குடும்பத்துப் பொண்ணாட்டம் சேலையிலயும் செம்ம கெத்து காட்டுறாங்களே என்றும் பிங்க் கலர் புடவையில ஷாலு ஷம்மு செம்ம கியூட் எனப் பாராட்டி வருகின்றனர்.
More Articles
- ஜிம்மிலும் குறையாத அழகு.. ஷாலு ஷம்முவின் ஒர்க் அவுட்.. உச்சுகொட்டும் ஃபேன்ஸ்!
- புடவைக்கு மாறியதும் குறைந்த மவுசு.. ஷாலு ஷம்முவை கண்டுக்க ஆள் இல்ல.. அந்த சர்ச்சை தான் காரணமா?
- காமம் தான் முதலில்.. ஒன் நைட் ஸ்டாண்ட் அதிகரிச்சுடுச்சு.. சாக்லேட் ஃபேண்டஸி.. ஷாலு ஷம்மு ஓபன்!
- Shalu Shammu - வீட்டில் யாருமே இல்லை.. ஜூஸ் கொடுத்து இயக்குநர் படுக்கைக்கு அழைத்தார்.. ஷாலு ஷம்மு ஓபன் டாக்
- Shalu Shammu: மாலையும் கழுத்துமாக நிற்கும் ஷாலும்மா.. அட மாப்பிள்ளை யாரு? தீயாக பரவும் பிக்ஸ்!
- Shalu Shammu: ஐபோன் தொலைந்த விரக்தியில்.. புதுசா ஷாலு ஷம்மு என்ன வாங்கியிருக்காரு பாருங்க!