சென்னை: தென்னிந்திய ரசிகர்களிடன் கனவுக்கன்னியாக பல வருடங்கள் ஜொலித்தவர் சிம்ரன். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், மாதவன் என பலருடன் சேர்ந்து நடித்த அவர்; தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். இப்போது கேரக்டர் ரோல்கள் செய்துவரும் அவர்; இப்போது கோபிநாத்துக்கு கொடுத்த பேட்டியில், சினிமாவுக்கு வரும் முன் தன்னுடைய தொழில் குறித்த விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.
மும்பையை சேர்ந்த சிம்ரன் தமிழில் பல வருடங்கள் டாப் ஹீரோயினாக இருந்தவர். தமிழில் ஒன்ஸ்மோர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதில் கமிட்டானபோதே நேருக்கு நேர், விஐபி ஆகிய படங்களிலும் கமிட்டானது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அவர் அறிமுகமான ஒரே வருடத்தில் மூன்று படங்கள் வெளியாகின. மூன்று படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து சிம்ரனுக்கு என்று தனி மார்க்கெட்டை உருவாக்கியது. ரசிகர்களிடமும் கனவுக்கன்னியாக மாறினார்.
டாப் ஹீரோயின்: முதல் மூன்று படங்களுமே பெற்ற வெற்றி; அவரை நிற்க நேரமில்லாமல் ஓட வைத்தது. ஏகப்பட்ட படங்களில் நடித்து வெற்றியை ருசித்தார். ரஜினி, கமல், அஜித், விஜய் என பலருடன் ஜோடி போட்டு நடித்த அவர்; தெலுங்கிலும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் என பல ஹீரோக்களுடன் நடித்து அங்கேயும்; தன்னுடைய கொடியை உயரமாக பறக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் திரைத்துறையில் பீக்கில் இருந்தபோது ராஜூ சுந்தரத்துடன் காதல், கமல்ஹாசனுடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.
செட்டிலான சிம்ரன்: ஒருகட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்த சூழலில் தன்னுடைய பால்ய நண்பரான தீபக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் 2003ஆம் ஆண்டு நடைபெற்றது. அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணம் செய்துகொண்டு சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர்; வாரணம் ஆயிரம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அப்போதிருந்து கேரக்டர் ரோல்களில் பிஸியாக நடித்துவருகிறார்.
தர்மனில் சிம்ரன்: இப்போது அவர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துவரும் தர்மன் படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கிவருகிறார். ஏற்கனவே சூப்பர் ஸ்டாருடன் பேட்ட படத்தில் சிம்ரன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது இரண்டாவது முறையாக ரஜினியுடன் பணியாற்றுவது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தர்மன் தொடக்க விழாவில் பேசியிருந்தார். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் கோபிநாத்தின் யூடியூப் சேனலுக்கு சிம்ரன் பேட்டியளித்திருக்கிறார்.
சிம்ரன் சொன்னது: அவர் கொடுத்த அந்தப் பேட்டியில், "என்னுடைய கரியர் தொகுப்பாளினியாகத்தான் ஆரம்பம் ஆனது. அது டிடி சேனலில் 1995ல் அந்தப் பயணம் தொடங்கியது. நிகழ்ச்சியின் பெயர், 'சூப்பர் ஹிட் முக்காபுல்லா பாடல்கள்'. பாடல் நம்பர் ஒன்று, இரண்டு என்று நான் தொகுத்து வழங்குவேன். அதனால்தான் நான் வணக்கம் சொல்லும்போது அந்த தொகுப்பாளினி ஸ்டைல் இருக்கும்" என்றார். இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்திருக்கிறார்கள். சிம்ரன் சொல்வதை பார்த்தால்; மேடம் அந்த காலத்து சிவகார்த்திகேயன் போல என்று கமெண்ட்ஸும் செய்துவருகிறார்கள்.
More Articles
- என் நீண்ட நாள் கனவு நனவாகுது.. ரஜினிக்கு ஜோடியாகும் சிம்ரன்.. இணையத்தைக் கலக்கும் இன்ஸ்டா பதிவு!
- Dharman: தலைவர் 173 படத்தோட டைட்டில் ‘தர்மன்’.. யாரு இயக்குநர்?.. யாரெல்லாம் ஹீரோயின்னு பாருங்க!
- முதலமைச்சரான குட்டியை சந்தித்த ருக்கு.. அடடே இவங்க காம்பினேஷன்ல இன்னொரு படம் வந்திருக்கலாம்
- விருமாண்டி அபிராமியை நியாபகம் இருக்கா?.. இந்த கேரக்டரை எல்லாம் மிஸ் செஞ்சுட்டாங்களாம்.. ஓபன் டாக்
- பாலிவுட்டில் மரியாதையே இல்லை.. எல்லாத்துக்கும் பேரம் பேசுவார்கள்.. சிம்ரன் அதிரடி!
- Simran: ஸ்டைலான ஆட்டம் போட்ட ஆல்தோட்ட பூபதி சிம்ரன்.. பந்தையத்துக்கு யாரு ரெடி? என்னா ஆட்டம்