சென்னை: "கண்கள் இரண்டால்" என சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய்யின் காதலியாக நடித்த நடிகை சுவாதி ரெட்டியையும் அவரது தெத்து பல்லையும் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். "ஏனென்றால் உனக்கு பிறந்தநாள்" என இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இடம்பெற்ற பாடல் பலரும் தங்கள் காதலியின் பிறந்தநாளுக்கு வாட்ஸப் ஸ்டேட்டஸையும் வைத்திருப்பார்கள்.
39 வயதாகும் நடிகை சுவாதி ரெட்டி தனது முதல் கணவருடன் விவாகரத்து செய்ததை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், திடீரென தற்போது 2வது திருமணம் செய்த போட்டோக்களை வெளியிட்டு சினிமா வட்டாரத்தையும் ரசிகர்களையும் ஷாக் ஆக்கியுள்ளார்.
சமந்தாவின் கர்ப்பத்தை அறிவித்த இயக்குநர் நந்தினி ரெட்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் சுவாதி ரெட்டிக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை சுவாதி ரெட்டி: 1987ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி ரஷ்யாவில் பிறந்தவர் தான் சுவாதி ரெட்டி. இந்திய கடற்படை அதிகாரியான சுவாதி ரெட்டியின் தந்தை ரஷ்யாவில் பயிற்சி பெற்று வந்த நிலையில், அங்கேயே அவருக்கு மகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், மும்பைக்கு குடிபெயர்ந்து இந்தியாவிலேயே சுவாதி ரெட்டி வளர்ந்தார். பள்ளி படிப்பையும், கல்லூரி படிப்பையும் ஹைதராபாத்தில் தொடர்ந்த அவர் நயன்தாராவை போல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர், 2005ல் டேஞ்சர் எனும் தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 2007ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெங்கடேஷ், த்ரிஷா நடித்த யாரடி நீ மோகினி படத்தின் ஒரிஜினல் தெலுங்கு வெர்ஷனான 'ஆடாவரி மாட்டலாக்கு அர்தலு வெருலே' படத்தில் தமிழில் சரண்யா மோகன் நடித்த கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதன் பின்னர் தான் தமிழில் சுப்ரமணியபுரம் படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. பைலட் உடன் முதல் திருமணம்: 2008ல் வெளியான சுப்ரமணியபுரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாகவே மாறினார். கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை, திரி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வந்தார். 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி மலையாளி பைலட்டான விகாஸ் வாசுவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அதன் பின்னர், சினிமாவில் நடிக்காமல் விலகிய சுவாதி ரெட்டி குழந்தைகளை பெற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், 4 ஆண்டு திருமண உறவு கசந்துப்போன நிலையில், 2022ம் ஆண்டு கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார். ஆனால், தனது விவாகரத்து விவகாரங்களை அவர் மீடியாவுக்கோ அல்லது சமூக வலைதளங்கள் வாயிலாகவோ வெளிச்சம் போட்டுக் காட்ட விரும்பவில்லை. இயக்குநருடன் 2வது திருமணம்: மீண்டும் 2023ம் ஆண்டு மந்த் ஆஃப் மது (Month of Madhu) படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தார். அந்த படத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீகாந்த் நகோத்தியை நேற்று திருமணம் செய்துள்ளார். திருமண புகைப்படங்களை வெளியிட்டு புதிய தொடக்கம் என சுவாதி ரெட்டி பதிவிட்ட நிலையில், அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகை சமந்தாவும் 4 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து விலகிய நிலையில், ஃபேமிலி மேன் இயக்குநரை திருமணம் செய்துக் கொண்டு கர்ப்பமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.More Articles