சென்னை: லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் ஃபேமஸானவர் சுவாசிகா. அந்தப் படத்துக்கு பிறகு கருப்பு படத்தில் ஒரு ரோலை ஏற்றிருந்த அவர்; கடைசியாக நூறு சாமி திரைப்படத்தில் நடித்திருந்தார். அது மிகப்பெரிய ஹிட்டடித்து அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்நிலையில் அவரது பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
மலையாள நடிகையான சுவாசிகா தமிழில் லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் தனக்கான மார்க்கெட்டை அதிகரித்துக்கொண்டாஅர்.அந்த ஒரு படத்திலேயே எதார்த்தமான நடிகை, எந்த ரோல் கொடுத்தாலும் ஃபிட் ஆகும் நடிகை என அத்தனை நல்ல பெயர்களையும் பெற்றுவிட்டார். அதன் காரணமாக அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தவண்ணம் இருக்கின்றன. அந்தவகையில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்த கருப்பு படத்தில் ஒரு ரோலை ஏற்றிருந்தார். அதில் அவருக்கு பெரிய ஸ்பேஸ் இல்லையென்றாலும்; ஓரளவுக்கு தேறியது. நாங்க நாலு பேரு பாடலில் அவரது நடனம் அனைவராலும் ரசிக்கப்பட்டது.
நூறு சாமி சுவாசிகா: அடுத்ததாக அவர் சசி இயக்கத்தில் நூறு சாமி திரைப்படத்தில் நடித்திருந்தார்.கடந்த மாதத்தில் வெளியான இந்தப் படமும் சூப்பர் வரவேற்பை பெற்றது. பெண்களுக்கு தேவையான கருத்தினை இயக்குநர் சசி எந்த வித அலட்டலும் இல்லாமல்; உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார் என கொண்டாடினார்கள். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து விஜய் ஆண்டனி - சசி கூட்டணியை மீண்டும் வெற்றி கூட்டணியாக மாற்றியது.
சுவாசிகா சூப்பர்: நூறு சாமியின் ஹைலைட்டே சுவாசிகாதான். தனக்கு கொடுக்கப்பட்டிருந்த கனமான கதாபாத்திரத்தை எந்த வித சிரமமுமின்றி ஜஸ்ட் லைக் தட்டாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ்கூட, 'தாய் கிழவி ராதிகாவுக்கும், நூறு சாமி சுவாசிகாவுக்கும்தான் இந்த வருடத்தில் விருதுக்கு போட்டியே' என தெரிவித்திருந்தார். அந்த கருத்தை ஒத்துதான் ரசிகர்களின் கருத்தும் இருக்கிறது.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் சுவாசிகா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், "அங்கே போகலாம், இங்கே போகலாம் என்று பல மேனேஜர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் சில இயக்குநர்களின் பெயர் மட்டும்தான் கிடைக்கும். ஒரு லட்சம் ரூபாய் கொடுங்கள் என சொல்வார்கள். அம்மா உடனே அனைத்து நகைகளையும் கழற்றிக்கொடுத்துவிட்டார்.
பயமாக இருந்தது: பலமுறை அப்படி நடந்திருக்கிறது. அவர்கள் அழைத்து செல்லும் இடங்களை பார்த்தால் அவ்வளவு பயமாக இருக்கும். அப்போதுதான் அம்மா என்னிடம், இனிமே சினிமா வேண்டாம் என்று சொல்லிவிட்டார். பிறகு மலையாளத்துக்கே சென்று ட்ரை செய்தேன். எப்போதும் என் மீது நம்பிக்கை இருந்தது. அது இல்லாமல் நான் எங்கேயும் போனதில்லைல். ஒருநாள்கூட சினிமாவில் பெயர் வாங்கமாடோம் என நினைத்ததே இல்லை" என்றார்.
More Articles
- 'நூறு சாமி’ சுவாசிகா மீது விஜய் ஆண்டனி கோபம்.. காரணம் மோகன்லால்.. என்னங்க சொல்றீங்க!
- Nooru Saami Box Office: பிச்சைக்காரன் போல பிக்கப் ஆகாத நூறு சாமி.. 5 நாள் வசூல் இவ்வளவு தானா?
- Nooru Saami: ஆக்சிஜனே நீங்கதான்.. கேமரா முன்னாடி கதறி அழுத நூறு சாமி நடிகை!
- சமந்தாவா?.. சுவாசிகாவா?.. முதல் நாளில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சக்கைப்போடு போட்டது யாரு?..
- நூறு சாமி ஹிட்.. சுவாசிகாவுக்கு ஆஸ்கர் விருதாம்.. விஜய் ஆண்டனி ஓபன் டாக்.. மேடத்துக்கு செம வெட்கம்
- Nooru Sami Public Review - நூறு சாமி பப்ளிக் விமர்சனம்.. படத்துக்கு மக்கள் கொடுத்த ரிசல்ட் தெரியுமா?