சென்னை: தவமாய் தவமிருந்து, பட்டியல், சத்தம் போடாதே, பொக்கிஷம் எனத் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக கலக்கிய நடிகை பத்மப்ரியா, தனது 46 வயதில் தாயாகியுள்ள செய்தியை, குழந்தையின் முதலாம் ஆண்டு பிறந்தநாளில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Advertisement

நடிகை பத்மபிரியா: இன்றைய ஜென்ஸி தலைமுறையினருக்கு நடிகை பத்ம பிரியாவை தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், பொக்கிஷம் படத்தில் வரும் "அன்புள்ள மன்னா, அன்புள்ள கணவா, அன்புள்ள கள்வனே" என்ற பாடலை சொன்னதும் நிச்சயம் நினைவுக்கு வந்துவிடும் அவரின் அழகிய முகம். மலையாள நடிகையான இவர், சேரன் இயக்கத்தில் வெளியான தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பின், பட்டியல், பிருத்விராஜின் சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம், தங்க மீன்கள் எனத் தமிழின் தரம் வாய்ந்த திரைப்படங்களில் நடித்துத் தனக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்கிறார்.

Advertisement

Photo Credit:

தாயானார்: ஜாஸ்மின் ஷா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இவர், திரையுலகில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், கர்ப்பகாலத்தையோ அல்லது குழந்தை தொடர்பான எந்த ஒரு விஷயத்தையோ இதுவரை வெளியில் காட்டாமல் ரகசியமாகப் பாதுகாத்து வந்த பத்மப்ரியா, தற்போது குழந்தையின் முதலாம் ஆண்டு பிறந்தநாளில் ஒரு சர்ப்ரைஸா போஸ்டை போட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.

365 நாட்கள் போட்டோஸ்: தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் முகத்தைக் காட்டாமல், தன் உடையைப் பிடித்துக்கொண்டிருக்கும் பிஞ்சுக்கையின் அழகிய புகைப்படத்தையும், தாயும் சேயும் கைகளைப் பிணைத்திருக்கும் மற்றொரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அத்துடன், வாழ்க்கையின் அற்புத 365 நாட்கள் என நெஞ்சை நெகிழ வைக்கும் கேப்ஷனையும் பதிவிட்டுத் தான் தாயான செய்தியை வெளி உலகிற்கு அறிவித்துள்ளார்.

Advertisement

Photo Credit:

வெடித்த புதிய விவாதம்: பத்மப்ரியாவின் இந்த போஸ்டுக்கு தமிழ் அபிராமி, "நான் உன்னையும், உன்னுடைய குழந்தையையும் மிகவும் நேசிக்கிறேன் என கமெண்ட் செய்துள்ளார். அதற்கு பத்மப்ரியா, நாங்கள் இந்த பாக்கியத்தைப் பெறக் காரணமே நீதான் என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். நடிகை அபிராமி திருமணமாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில்தான் பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அப்படி இருக்கையில் பத்மபிரியா காரணமே நீதான் என பதிவிட்டு இருப்பதால், நடிகை பத்மப்ரியாவும் அபிராமியைப் போலவே குழந்தையைத் தத்தெடுத்துத் தாயாகி இருக்கிறாரா என்ற விவாதம் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. கடந்த ஒரு வருடமாகத் தொடர்ந்து போட்டோஷூட், டிராவல் என இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருந்த பத்மப்ரியா, தனது வாழ்க்கையின் ஒரு மகிழ்ச்சியான தருணத்தை ஒரு வருடம் வரை ரகசியமாக வைத்திருந்து, திரையுலகினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.