சென்னை: திரிஷாவும், விஜய்யும் கோலிவுட் ரசிகர்களின் ரீல் ஜோடிகளில் ஃபேவரைட். ஐந்து படங்கள் சேர்ந்து பணியாற்றிய அவர்கள்; இப்போது சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார்கள். அதாவது திரிஷாவுடன் இருக்கும் பழக்கத்தால்தான் விஜய் தன் மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டார் என்று பேச்சுக்கள் ஓடுகின்றன. இந்நிலையில் திரிஷா தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் சென்சேஷனலாகியிருக்கிறது.

Advertisement

விஜய்யும், திரிஷாவும் முதன்முதலில் கில்லி திரைப்படத்தில் இணைந்து நடித்தார்கள். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனையடுத்து திருப்பாச்சியில் இணைந்தார்கள். அதுவும் ஹிட். தொடர்ச்சியாக இரண்டு படங்களில் சேர்ந்து நடித்து ஹிட்டானதால்; ஆதி, குருவி படங்களிலும் சேர்ந்தார்கள். ஆனால் அந்தப் படங்கள் படுதோல்வியை சந்தித்தன. அதுமட்டுமின்றி அந்த சமயத்திலேயே அவர்களை இணைத்து வைத்து கிசுகிசுக்கள் கிளம்பின. இதனால் அவர்கள் சேர்ந்து நடிக்காமலேயே இருந்தார்கள்.

Advertisement

Photo Credit:

சேர்த்து வைத்த லோகேஷ்: இப்படிப்பட்ட நிலைமையில்தான் விஜய்யையும், திரிஷாவையும் வைத்து லியோ படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். படம் தோல்வியடைந்தாலும்; அவர்கள் இரண்டு பேரும் மீண்டும் சேர்ந்து நடித்தது பல பிரச்னைகளுக்கு வழி வகுத்துவிட்டதாகவே தெரிகிறது. அந்தப் படத்தின் ஷூட்டிங் சமயத்திலேயே இரண்டு பேரும் சேர்ந்து வெளிநாடுகளுக்கு செல்வதாக பேச்சு வந்தது. அவர்களது புகைப்படங்களும் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகும்.

விஜய் விவாகரத்து: நிலைமை இப்படி இருக்க விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று அவரது மனைவி சங்கீதா மனுத்தாக்கல் செய்திருக்கிறார். தன்னுடைய கணவருக்கு இன்னொரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சொல்லி குண்டை தூக்கிப்போட்டார். அவர் சொல்லும் நடிகை கண்டிப்பாக திரிஷாவாகத்தான் இருக்கும் என சந்தேகப்பட்ட நிலையில்; இரண்டு பேரும் ஜோடியாக பொதுவெளிக்கு வர தொடங்கிவிட்டார்கள். விஜய் முதலமைச்சராக பதவியேற்றபோதுகூட முதல் வரிசையில் அமர்ந்து கண்கள் கலங்க பார்த்துக்கொண்டிருந்தார் திரிஷா.

Advertisement

ஆஸ்திரேலியாவில் திரிஷா: இந்நிலையில் திரிஷா தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். அங்கு சிட்னியில் கடை ஒன்றை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார். அதனையடுத்து அங்கிருந்த இந்தியர்களிடம் பேசிய அவர், "சிட்னி எப்போதுமே எனக்கு நல்ல நினைவுகளை மட்டுமே கொடுத்திருக்கிறது. எனக்கு ஆஸ்திரேலியா ரொம்ப பிடிக்கும். அதிலும் சிட்னி நகரம் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல்' என்று கூறினார். அப்போது கூட்டத்தில் இருந்த தமிழர் ஒருவர், 'மேடம் விஜய் சாரை கேட்டதாக சொல்லுங்கள்' என கூறினார்.

Advertisement

திரிஷாவின் ரியாக்‌ஷன்: அவர் அப்படி சொன்னதை கேட்டும் கேட்காத மாதிரி பேச தொடங்கிய திரிஷா, "எனக்கு இலங்கை தமிழ் ரொம்ப பிடிக்கும். சென்னை தமிழ்தான் நன்றாக வரும். இங்கே எல்லோரும் தமிழ் பேசுபவர்கள் இருக்கிறார்கள். இது அனைவரும் கலந்த கூட்டமாக இருந்தது. அதனால்தான் ஆங்கிலத்தில் பேசினேன். இங்கே சுத்த தமிழாக இருக்கிறது. இதுமாதிரி அங்கேகூட பேசமாட்டோம். நீங்கள் ரொம்ப அழகாக தமிழ் பேசுகிறீர்கள்" என்றார். அப்போது இன்னொருவர், 'மேடம் தளபதி' என கூற; நன்றி என முடித்துக்கொண்டார்.