சென்னை: கோலிவுட்டின் சீனியர் நடிகைகளில் ஒருவர் வனிதா விஜயகுமார். கடந்த வருடத்தில் அவரது இயக்கத்தில் மிஸஸ் & மிஸ்டர் படம் வெளியாகி மோசமான தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அவர் நடித்த லவ் ஓ லவ் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் வனிதா விஜயகுமாரின் வீடியோ ஒன்று சோஷியல் மிடீயாவில் ட்ரெண்டாகியுள்ளது.

Advertisement

நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் வனிதா. 90களில் ஹீரோயினாக அறிமுகமான அவர் சில படங்களில் நடித்துவிட்டு; ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் பிறந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் ஜோவிகா என்பது குறிப்பிடத்தக்கது. சில காரணங்களால் கணவரை பிரிந்த வனிதா; அதற்கு பிறகும் சில திருமணங்களை செய்து பார்த்தார். ஆனால் அதுவும் செட் ஆகாததால் அதிலிருந்து வெளியே வந்துவிட்டார்.

Advertisement

Photo Credit:

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்: வனிதா என்றாலே சர்ச்சைகளுக்கு அனைவரது எண்ணத்திலும் வரும். திருமண வாழ்க்கையில் பிரச்னைகள், தந்தை விஜயகுமாருடன் பிரச்னை, சகோதர, சகோதரிகளுடன் பிரச்னை என பிரச்னைகளுக்கு மத்தியிலேயே வாழ்ந்துவருபவர். இருப்பினும் அதையெல்லாம் நினைத்து துளிகூட கவலைப்படாமல் தன்னுடைய கரியரிலும், வாழ்க்கையிலும் கவனத்தை செலுத்துபவர். நிச்சயம் அந்த குணத்தை பாராட்டத்தான் வேண்டும்.

இயக்குநர் வனிதா: ஹீரோயினாக சக்சஸ் ஆக முடியாத அவர்; இயக்குநர் அவதாரத்தையும் எடுத்தார். ராபர்ட் மாஸ்டரை ஹீரோவாக வைத்து மிஸஸ் & மிஸ்டர் படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. எந்த ஓடிடி தளமும் வாங்காததால் யூடியூபில் படத்தை ரிலீஸ் செய்யும் நிலைமை உருவானது. அதிலும் பெரிய அளவில் வியூஸ்கள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படத்தை ஜோவிகாதான் தயாரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

பிஸியான நடிகை: இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு; பாதியில் எவிக்ட் ஆனார். அதற்கு பிறகு அவருக்கு கேரக்டர் ரோல்களில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன. அநீதி, அந்தகன் என பல படங்களில் நடித்த அவர்; இப்போது லவ் ஓ லவ் படத்திலும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக நடிக்கிறார். நாளை வெளியாகவிருக்கும் படத்தின் மீது ஓரளவுக்கு ஹைப் இருக்கத்தான் செய்கிறது.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் வனிதா விஜயகுமாரின் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது, சென்னையில் அவர் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு தன்னுடைய காரை எடுக்க சென்றார். அப்போது அவரது காருக்கு அருகேயே இன்னொரு காரும் நிறுத்தப்பட்டிருந்ததால்; இவரால் தன் காருக்கு போக வழியில்லாமல் இருந்தது. உடனே எதையும் யோசிக்காத அவர்; நான் எவ்வளவு ஸ்லிம் என பாருங்கள் என கூறிவிட்டு; இரண்டு கார்களுக்கிடையே இருந்த சின்ன கேப்பை பயன்படுத்தி தன் காருக்கு சென்றுவிட்டார். இந்த வீடியோதான் வைரலாகியிருக்கிறது.