சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் 'மண்வாசனை' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து, இன்று வரை தன் கம்பீரமான நடிப்பால் பல தலைமுறைகளைக் கவர்ந்து வரும் மூத்த நடிகை ரேவதி, தான் அறிமுகமான முதல் படத்திலேயே ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவத்தையும், அக்காட்சிக்காகப் படக்குழு எடுத்த அதிரடி முடிவையும் நேர்காணல் ஒன்றில் பேசி உள்ளார்.

Advertisement

நடிகை ரேவதி: தமிழ் சினிமாவில் எத்தனையோ வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகை ரேவதியைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. பல வெற்றிப்படங்களை கொடுத்த ரேவதி தற்போது வயதுக்கேற்ற அழுத்தமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவருக்கு, சமீபத்தில் வெளியான 'Patriot' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுத்தந்தது. திரையில் மட்டுமல்லாமல், சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டு எப்போதும் குரல் கொடுத்து வரும் ரேவதி, டெல்லியில் நடைபெற்ற நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் நேரில் கலந்துகொண்டு மாணவர்களுக்குத் தன் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.

Advertisement

17 வயசுல குளிச்கிற சீன்: தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது திரையுலகப் பயணம் குறித்துப் பேசிய ரேவதி, 'மண்வாசனை' படத்தின் படப்பிடிப்பு நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அதில், மண்வாசனை திரைப்படத்தில் 'பொத்தி வச்ச மல்லிகை மொட்டு' என்ற பாடலில் நான் பாவாடை கட்டிக்கொண்டு தண்ணீரில் குளிப்பது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட இருந்தது. அந்தக் காட்சியைப் பற்றி என்னிடம் சொன்னதுமே எனக்குப் பயம் வந்துவிட்டது. உடனே என் அம்மாவிடம் சென்று முடியாது என்று சொன்னேன், அப்போது எனக்கு வெறும் 17 வயது தான். அதுவரை பொது இடத்தில் பாவாடை கட்டி, முதுகைக்காட்டி குளித்த பழக்கமே இல்லை என்பதால் என்னால் முடியாது என்ற சொன்னேன்.

Advertisement

Photo Credit:

நடிக்க முடியாது: உடனே அம்மா பாரதிராஜாவிடம் சென்று, எங்கள மன்னித்து விடுங்க சார், இதற்கு மேல் என் மகளால் நடிக்க முடியாது. இதுவரை படப்பிடிப்பிற்கு எவ்வளவு பணம் செலவானதோ, அந்தப் பணத்தை நாங்களே உங்களுக்குத் திருப்பித் தந்துவிடுகிறோம் என்று சொன்னாங்க, அப்புறம் பாரதி ராஜா சார் அம்மாவை சமாதானப்படுத்தி, என்னையும் சமாதானப்படுத்தி, எனக்கு கூச்சமும் பயமும் போக வேண்டும் என்பதற்காக, படப்பிடிப்பு இடத்தில் இருந்த மேலும் பல பெண்களை அதேபோலப் பாவாடை கட்ட வைத்து என்னுடன் சேர்ந்து நிற்க வைத்தார். ஆனால், படத்தில் அந்த பாட்டில் நான் மட்டும் தான் வருவேன். இயக்குநர் பாரதிராஜாவின் இந்தச் சமயோசிதமான செயலால் தான் அந்த ஐகானிக் பாடல் காட்சி உருவானது என ரேவதி பேசி உள்ளார்.